காவல்துறை - பொதுமக்கள் நல்லுறவு மாரத்தான் போட்டி: எஸ்பி தொடக்கம்

காவல்துறை பொதுமக்கள் நல்லுறவு மினி மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கினார்

Update: 2022-02-26 09:45 GMT

மதுரை மாவட்டத்தில்  நடந்த காவல்துறை - பொதுமக்கள் நல்லுறவு மாரத்தான் போட்டி

மதுரை மாவட்டத்தில் காவல்துறை - பொதுமக்கள் நல்லுறவு மாரத்தான் போட்டி நடைபெற்றது. 

மதுரை மாவட்டத்தில் காவல்துறை மற்றும் பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில், மதுரை மாவட்டத்தில் காவல்துறை பொதுமக்கள் நல்லுறவு மாரத்தான் போட்டி 26.02.2022 மதுரை மாவட்டம், திருமங்கலம் உட்கோட்டத்தில், ஐயங்கார் பேக்கரி சோழவந்தான் ரோட்டில், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ. பாஸ்கரன், கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த மாரத்தான் போட்டியில் ,சுமார் 300 நபர்கள் கலந்து கொண்டு, திருமங்கலத்தில் இருந்து செக்கானூரணி காவல் நிலையம் வரை சுமார் 13 கிலோ மீட்டர் தூரத்திற்கு மினி மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இதில், முதல் பரிசை வென்ற கோகுல் சமயநல்லூரை சேர்ந்த நபர் 45 நிமிடத்தில் கடந்தும், இரண்டாவது பரிசை வென்ற அபிமன்யு மதுரையை சேர்ந்த நபர் 50 நிமிடத்தில் கடந்தும், மூன்றாவது பரிசை வென்ற சுரேஷ் குலமங்கலத்தை சேர்ந்தநபர் 55 நிமிடத்தில் கடந்தும் பரிசுகளை தட்டிச் சென்றனர்.

இப்போட்டியில், மேலும், 10 நபர்களுக்கு சிறப்பு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த காவல்துறை பொதுமக்கள் நல்லுறவு மினி மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சான்றிதழ் வழங்கினார்கள். 

இந்நிகழ்ச்சியில், திருமங்கலம் காவல் துணை கண்காணிப்பாளர் சிவகுமார் மற்றும் உசிலம்படி உட்கோட்டம் காவல்துணை கண்காணிப்பாளர் நல்லு கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை, மதுரை மாவட்ட ஆயுதப்படை காவல்துணை கண்காணிப்பாளர் விக்னேஸ்வரன் செய்திருந்தார்.

Tags:    

Similar News