திருப்பரங்குன்றம் பகுதியில் 95 விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி
திருப்பரங்குன்றம் பகுதியில் 95 விநாயகர் சிலைகள் வைக்க காவல்துறை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, பகுதிகளில் நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவதை முன்னிட்டு, 95 சிலைகளுக்கு போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்.
மதுரை மாநகர் பகுதியில், திருப்பரங்குன்றம் பகுதிகளில் 53 சிலைகளுக்கும், திருநகர் பகுதிகளில் 12 சிலைகளுக்கும் அவனியாபுரம் பகுதிகளில் 28 சிலைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதில், இந்து முன்னணி சார்பில் திருப்பரங்குன்றத்தில் 24 சிலைகளும், திருநகரில் 6 சிலைகளும், அவனியாபுரத்தில் 24 சிலைகளும் வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதே போல், இந்து மக்கள் கட்சி சார்பில், திருப்பரங்குன்றத்தில் (26) இருபத்தியாறு சிலைகளுக்கும் அனுமன் சேனா சார்பில் 13 சிலைகளுக்கும் பாஜக சார்பில் 1 சிலைக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதே போல், திருநகர் பகுதியில் இந்து மக்கள் கட்சிக்கு 6 சிலைகளும் அனுமன் சேனாவுக்கு ஆறு சிலைகளும் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், அவனியாபுரம் பகுதிகளில் 24 சிலைகளுக்கும் இந்து முன்னணி சார்பில் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் சார்பில் நான்கு சிலைகளும் புறநகர் பகுதியான பெருங்குடி வளையங்குளம் பகுதிகளில் இரு சிலைகளுக்கு காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது .
விநாயகர் சிலைகள் வைப்பதற்கான வழிகாட்டு விதி நெறிமுறைகளை பின்பற்றவும் பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் செல்வதற்காகவும் காவல்துறையினர் விரிவான வழிகாட்டுதல் முறைகள் வழங்கி பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.