மதுரையில் சாலைகளில் ஏற்படும் திடீர் பள்ளத்தால் மக்கள் அவதி
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 76 வார்டு பழங்காநத்தம் அக்ரஹாரம் மாடக்குளம் பிரதான சாலையில் ஏற்பட்ட திடீர்பள்ளம்;
வாகனங்கள் அதிக சென்றும் வரும் சாலையில் திடீர் பள்ளம்: நல்வாய்ப்பாக எந்த வாகன ஓட்டியும் பள்ளத்தில் சிக்காமல் அதிருஷ்டவசமாகத் தப்பினர்.
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 76 வார்டு பழங்காநத்தம் அக்ரஹாரம் மாடக்குளம் பிரதான சாலையில் சுமார் 10 மணி அளவில் பத்து அடி ஆழமும் 6 அடி அகலமும் கொண்ட பள்ளமானது விழுந்தது. சாலையில் அதிக அளவு இரு சக்கர வாகனங்கள் கனரக வாகனங்களும் சென்றுவரும் பகுதியாகும். திடீரென சாலை ஏற்பட்ட பள்ளத்தைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக வாகனத்தை நிறுத்தி தடுப்புகளை அமைத்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இதே போன்று தான் இன்று காலை ஐந்து முப்பது மணி அளவில் 100 மீட்டர் தொலைவில் உள்ள பகுதியில் பேருந்து ஆனது பள்ளத்தில் சிக்கியது. இப்பேருந்து அதைக்கடந்து சென்றிருந்தால் நிச்சயம் அதிர்வு தாங்காமல் விபத்தில் சிக்கியிருக்க வாய்ப்புகள் உள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து, பழங்காநத்தம் மாடக்குளம் மெயின் ரோடு பகுதிகளில் திடீர் திடீரென அதிக அளவு பள்ளங்கள் விழுவதால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இதுகுறித்து, மாநகராட்சி ஆணையாளர் சாலையை உரிய ஆய்வு செய்து வேறு எங்கும் பள்ளம் ஏற்படாத அளவிற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.