கண்மாயில் கழிவு நீர் கலப்பதால் வீசும் துர்நாற்றத்தால் மக்கள் அவதி

மதுரை அருகே அயன்பாப்பாக்குடி கண்மாயில் கழிவு நீர் கலப்பதால் சுகாதாரச்சீ்ர்கேடு உருவாகியுள்ளதாக மக்கள் புகார்;

Update: 2021-11-11 09:00 GMT

மதுரை அருகே அயன்பாப்பாக்குடி கண்மாயில் கழிவு நீர் கலப்பதால் நுரையாக வெளிவரும் தண்ணீர்

மதுரை அருகே அயன்பாப்பாக்குடி கண்மாயில் கழிவு நீர் கலப்பதால் நுரையாக வெளிவரும் பாசன நீர் நுரை, துர்நாற்றத்தால் பொதுமக்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம்,  திருப்பரங்குன்றம் தாலுகா, அவனியாபுரம் பகுதியில் அயன்பாப்பாகுடி கண்மாய் உள்ளது. இதன் மூலம் சுமார் 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பயன் பெறுகின்றன. இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் அதிக நீர்வரத்து இருந்தது. இதனைத் தொடர்ந்து, அருகில் குடியிருப்புகள் நீர் சூழ்ந்ததால் பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் நீர் ஆதாரங்களில் உள்ள தடைகளை நீக்கி நீர் செல்ல வழி ஏற்படுத்தினர்.

நேற்று முதல் கண்மாயில் இருந்து வெளியேறும் நீர் மாசடைந்து கழிவு நீர் கலப்பதால் பாசனத்திற்கு செல்லும் வழிகளில் நுரை ததும்பி துர்நாற்றம் வீசும் நிலை உருவாகியுள்ளது. இதனால், இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்துடன் காணப்படுகின்றனர். இதுகுறித்து, பொதுப்பணித் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, அயன்பாப்பாகுடி கணமாயில் கலக்கும் கழிவு நீரை தடுத்து, விவசாயத்திற்கு பயன்படும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என  விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News