மதுரை மாநகராட்சி வார்டில் பல நாட்களாக குடிநீர் வரவில்லையென மக்கள் புகார்

ஆறு நிறைய தண்ணீர் புரண்டோடினாலும் கண்மாய் நிரம்பியிருந்தாலும் தங்களுக்கு ஒரு குடம் தண்ணீர் கூட கிடைக்கவில்லை;

Update: 2021-12-24 07:45 GMT

வைகை ஆறு முழுவதும் தண்ணீர் ஓடினாலும், கண்மாய் முழுவதும் தண்ணீர் இருந்தும் 20 நாட்களாக ஒரு குடம் குடிக்கத் தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் சிரமப்படும் நிலை தொடர்கிறது.

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட திருநகர் 98- வது வார்டு க்கள் 1 2 3 மூன்று தெருக்கள் உள்ளன. இதில், சுமார் 300 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. அவர்களுக்கு மாநகராட்சி குடிநீர் லாரிகள் மூலமாக குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், அப்பகுதியில் 22 நாட்களாக மேலாக குடிநீர் வரவில்லை என, அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும், ஒரு குடம் 15 முதல் 20 ரூபாய் வரை விலை கொடுத்து குடிநீர் வாங்க வேண்டிய நிலை உள்ளது எனவும், அன்றாட கூலி வேலை பார்க்கும் நாங்கள் எப்படி ஒரு நாளைக்கு 100 முதல் 200 ரூபாய் குடிநீருக்காக செலவழிக்க முடியும் என வினா எழுப்புகின்றனர். ஆறு நிறைய தண்ணீர் புரண்டோடினாலும், கண்மாய் நிரம்பியிருந்தாலும், தங்களுக்கு ஒரு குடம் தண்ணீர் கூட கிடைக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை சொல்லியும் ,ஒரு குடம் தண்ணீர் கூட கிடைக்கவில்லை என பொதுமக்கள் ஆதங்கப்படுகின்றனர். மாநகராட்சி ஆணையாளர் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து, அப்பகுதி மக்களுக்கு முறையான குடிநீர் வழங்க வழிவகை செய்ய வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். மாநகராட்சி ஆணையாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதியில் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags:    

Similar News