கண்மாய் நீர் நிரம்பி குடியிருப்புகளுக்குள் புகுந்ததால் மக்கள் அவதி
முத்துப்பட்டி கண்மாய் நிரம்பி பாண்டியன் நகர் குடியிருப்புக்குள் புகுந்ததால் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர்
முத்துப்பட்டி கண்மாய் நிரம்பி பாண்டியன் நகர் குடியிருப்புக்குள் புகுந்ததால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், முத்துபட்டி கண்மாய் தனது முழு கொள்ளளவை எட்டிய நிலையில் கண்மாயிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டபோது, வாய்க்கால்களில் அடைப்பு ஏற்பட்டிருந்தது.இதன் காரணமாக வெள்ளநீர் மதுரை மாநகராட்சி வார்டு எண் 73 க்கு உட்பட்ட பாண்டியன் நகர் குடியிருப்பு பகுதிக்குள் கண்மாய் நீர் சூழ்ந்தது.
இதனால், பாண்டியன் நகர் குடியிருப்பு பகுதிக்குள் 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனால் ,அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.மதுரை நகரில் பல இடங்களில் மழை பெய்தது. மதுரை ஒத்தக்கடை, கருப்பாயூரணி, வண்டியூர், யாகப்பநகர், அண்ணாநகர், மேலமடை, கோமதி புரம் பகுதிகளில், மழையால் சாலைகளில் நீர் தேக்கி பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதியடைந்தனர்.
கோமதிபுரம், ஜூப்பிலி டவுன் பகுதிகளில் தாழைவீதி சாலைகள் சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. மதுரை மாநகராட்சி உதவி ஆணையர், சாலையை பார்வையிட்டு, சீரமைக்க சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.