தொகுப்பூதிய பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும்: விருதுநகர் எம்.பி. கடிதம்
தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் பல்கலைக்கழக ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவும், பணிநிரந்தரம் செய்யவும் வலியுறுத்தினார்;
காமராஜர் பல்கலைக்கழகத்தில், தொகுப்பூதிய பணியாளர்கள் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு: சம்பளம் மற்றும் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, விருதுநகர் எம்.பி. மாணிக்கம்தாகூர், உயர்கல்வித்துறை அமைச்சர் மற்றும் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொகுப்பூதிய பணியாளர்கள் பணி புரியும் ஊழியர்களுக்கு சம்பள தொகையை வழங்காமல், நிறுத்தி உள்ளதால் மூன்று நாட்களாக தொடர் உண்ணாவிரதம் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்தனர். இது குறித்து தகவல் அறிந்த விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், உயர்கல்வித்துறை அமைச்சர் மற்றும் உயர்கல்வித் துறை செயலர் ஆகியோருக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். பல ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் பல்கலைக் கழக ஊழியர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்கவும், பணிநிரந்தரம் செய்யவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.