மதுரையில் குழாய் பதிக்க தோண்டிய பள்ளத்தில் பேருந்து சிக்கியதால் பயணிகள் அவதி

பேருந்து பள்ளத்தில் இருந்து மீட்பதற்கு ஓட்டுநர் பலமுறை முயற்சித்தும் பள்ளத்திலிருந்து வெளிவர முடியவில்லை

Update: 2022-01-02 05:15 GMT

மதுரையில் குழாய் பதிக்க தோண்டிய பள்ளத்தில் சிக்கிய அரசுப் பேருந்து

மதுரையில் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட குழியில் சிக்கிய அரசு பேருந்தால் பயணிகள் அவதிப்பட நேரிட்டது

மதுரை மாடக்குளத்திலிருந்து எம்ஜிஆர் பேருந்து நிலையத்திற்கு   காலை 5.30 மணிக்கு முதல் நடையில் பயணிகளை ஏற்றிக்கொண்டு அக்ராஹார பகுதி வழியாக சென்று கொண்டிருந்த மாநகர் அரசு பேருந்து திடீரென சாலையில் ஓரத்தில் குடிநீர் குழாய்கள் பதிப்பதற்காக தோண்டபட்டிருந்த பள்ளத்தில் எதிர்பாராதவிதமாக  சிக்கியது. 

இதனைத்தொடர்ந்து, பேருந்து பள்ளத்தில் இருந்து மீட்பதற்கு ஓட்டுநர் பலமுறை முயற்சித்தும் பள்ளத்திலிருந்து வெளிவர முடியவில்லை. இதனால்,  பேருந்தில் இருந்த சுமார் 30 பயணிகள் உடனடியாக  பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்டனர்.  மாற்றுப் பேருந்து கிடைக்காமல் அனைவரும்  நெடுந்தொலைவு நடந்தே சென்றனர்.

மதுரை மாநகராட்சி பகுதிகளில் குழாய் பதிப்பு பணிகள், சாலை மேம்பாட்டு பணிகள் ஆங்காங்கு நடைபெற்று அதற்காக தொண்டபடும் பள்ளத்தை சரிவர மூடாமல், மாநகராட்சி ஊழியர்கள் சென்று விடுவதால், இது போன்று அடிக்கடி வாகனங்கள் தோண்டப்பட்ட பள்ளங்களில்  சிக்கிக் கொள்வதாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.இது குறித்து, மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News