திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் கழகம் கூட்டம்
திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், பெற்றோர் ஆசிரியர் கூட்டம் மூன்று ஆண்டுகளில் படிக்கும் மாணவர்களுக்கு நடைபெற்றது;
மாணவர் ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் பிரேமானந்தம் கணேசன் முனைவர் திருப்பதி முறையே முதலாம் ஆண்டு இரண்டாம் ஆண்டு மற்றும் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களின் பெற்றோர் கூட்டத்தில் வரவேற்புரை ஆற்றினர்.
கல்லூரி முதல்வர் முனைவர் வெங்கடேசன் தலைமை உரையாற்றினார். கல்லூரியின் செயலர் சுவாமி வேதானந்த, குலபதி சுவாமி அத்யாத்மனந்த ஆசியுரை வழங்கினர். துணை முதல்வர் பார்த்தசாரதி மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் முனைவர் சஞ்சீவி சிறப்புரையாற்றினர். மாணவர்களின் படிப்பு, விளையாட்டு, வேலைவாய்ப்பு, தகுதி மேம்பாட்டு பயிற்சி தேவை பற்றி பெற்றோர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. மேலும், பெற்றோர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். கல்லூரி முதல்வர் வெங்கடேசன் பெற்றோர்களின் கருத்துக்களுக்கு விளக்கமும் வழங்கினார்.
மாணவர் துணை ஒருங்கிணைப்பாளர்கள் இரகு, மாரிமுத்து, முனைவர் காமாட்சி ஆகியோர் முறையே முதலாம் ஆண்டு இரண்டாம் ஆண்டு மற்றும் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களின் பெற்றோர் கூட்டத்தில் நன்றி உரை ஆற்றினர். முதலாம் ஆண்டு இரண்டாம் ஆண்டு மற்றும் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களின் பெற்றோர் கூட்டத்தை முறையே நாகராஜ் முனைவர் குமாரசுவாமி மற்றும் வேல்முருகன் தொகுத்து வழங்கினர். முனைவர் சந்திரசேகரன் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.