மதுரையில் ஆன் லைன் மோசடி: காவல் ஆணையரிடம் புகார்
ஆட்டோ ஓட்டுனர்கள் அக்கவுண்டுக்கு பணம் 2500 ரூபாய் அனுப்பியதாக ஒரு எஸ்எம்எஸ் அனுப்பி வைக்கிறார்கள்.;
மதுரை மாவட்ட ஆன்லைன்ஓட்டுனர் தொழிற்சங்கம் சார்பாக மதுரை மாநகர் காவல் ஆணையாளரிடம்மோசடி கும்பலை கைது செய்யக்கோரி ஆட்டோ ஓட்டுநர்கள் மனு அளித்தனர்
மதுரையில் கடந்த சில நாட்களாக வடநாட்டு கும்பல் ஒன்று ஆன்லைன் மூலமாக ஆட்டோ புக்கிங் செய்து, தாங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டியதாக, ஒரு மருத்துவமனையின் அடையாளத்தை சொல்லி அங்கு இருக்கிறார்கள். அவர்களை அழைத்து கொண்டு போய் வீட்டில் இறக்க வேண்டும் என்று கூறி தாங்கள் அக்கவுண்ட் நம்பரை கொடுங்கள் என்று ஓலா, உபர், ராபிடோ செயலி மூலமாக ஆட்டோ ஓட்டுனர்கள் அக்கவுண்டுக்கு பணம்2500 ரூபாய் அனுப்பியதாக ஒரு எஸ்எம்எஸ் அனுப்பி வைக்கிறார்கள்.
இதனை நம்பி ஆட்டோ ஓட்டுநர்கள் சம்பந்தப்பட்டவர்களை தேடி அவர்கள் சொன்ன இடத்துக்கு சென்று காத்திருந்து அப்படி யாரும் வரவில்லை என்று தெரிந்தவுடன், மீண்டும் அவர்கள் தொலைபேசி தொடர்பு கொண்டு அவர் வரவில்லை என்று கூறியதும், தங்களுக்கு ஆட்டோ செலவுக்காக 500 ரூபாய் எடுத்துக் கொண்டு பாக்கி தொகையை திருப்பி அனுப்பி வைக்குமாறு கூறுகிறார்கள்.
வந்த SMSநம்பி பணத்தை திருப்பி அனுப்பி வைக்கிறார்கள். ஆனால் இவர்கள் கூகுள் பே மூலமாக சரி பார்க்கும் போது பணம் ஏறவில்லை என்பது தெரிகிறது. அப்படி பணத்தை அனுப்பவில்லை என்றால் அங்கிருந்து போன் மூலம் தாங்கள் ரிட்டையர்டு ராணுவ அதிகாரி, காவல்துறை அதிகாரி என்று மிரட்டி தாங்கள் மீது காவல்துறையில் புகார் அளிப்போம் என்று மிரட்டி பணத்தை பெற்றுக் கொள்கிறார்கள். இதுபோன்று மதுரையில் நூற்றுக்கணக்கான ஆட்டோ ஓட்டுனர்கள் இப்படி பணத்தை பறி கொடுத்துள்ளார்கள். ஏற்கெனவே பெட்ரோல் விலை உயர்வு, அதிகமானமக்கள் இலவச பேருந்துகள் செல்வதாலும் ஆட்டோ தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். இந்த நிலையில் மோசடி குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.