மதுரை விமானநிலையத்தில் ஒமிக்ரான் பரிசோதனை மையம்: அமைச்சர் திறப்பு

மதுரை விமானநிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரத்துறை சார்பில் ஒமிக்ரான் பரிசோதனை மையம் துவங்கப்பட்டது.

Update: 2021-12-02 09:45 GMT

மதுரை விமான நிலையத்தில் ஒமிக்ரான் பரிசோதனை மையத்தை தொடங்கி வைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மதுரை விமான நிலையத்தில், புதிய வகை ஓமிக்ரான் (வைரஸ் வேகமாக பரவி வருவதை அடுத்து சுகாதாரத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை விமான நிலையத்தில் பரிசோதனை மையம் துவங்கப்பட்டது.

தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஓமிக்ரான் பரிசோதனை மையத்தை துவக்கி வைத்தார்.

இன்று காலை 8 மணியளவில் மதுரை வந்த துபாய் விமானத்தில் வந்த (168 பயணிகள் மற்றும் 6 குழந்தைகள் உள்பட) 174 பேருக்கும் ஓமிக்ரான் பரிசோதனை செய்யப்பட்டது.

மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஸ் சேகர், அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி. சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை துணை இயக்குநர் பழனிச்சாமி, வட்டார மருத்துவர் சிவகுமார், மேற்பார்வையாளர் தங்கசாமி ஆகியோர் அடங்கிய 18 பேர் குழு ஓமிக்ரான் பரிசோதனைகள் செய்தனர்.

Tags:    

Similar News