மதுரை அருகே சுங்கச் சாவடியில் பழைய கட்டணம் வசூல்

மதுரை எலியார்பத்தி சுங்கச்சாவடியில் பழைய சுங்கச்சாவடி கட்டணமே அமலில் இருப்பதாக தேசிய நெடுஞ்சாலை துறை அறிவித்துள்ளது.

Update: 2024-09-01 14:54 GMT

மதுரை அருகே சுங்கச் சாவடியில் பழைய கட்டணம் வசூல் (கோப்பு படம்)

மதுரை எலியார்பத்தி சுங்கச்சாவடியில் பழைய சுங்கச்சாவடி கட்டணமே அமல் - சுங்கச்சாவடி கட்டணம் உயர்வில்லை என்று தேசிய நெடுஞ்சாலை துறை அறிவிப்பு:

தமிழ்நாட்டில் இன்று முதல் 24-கு மேற்பட்ட சுங்கச்சாவடிகளுக்கு, சுங்கச்சாவடி கட்டண உயர்வானது இன்று காலை முதல் அமலுக்கு வருகிறது. கட்டண உயர்வு தற்போது, இருந்த கட்டணத்தை விட ஐந்து ரூபாய் முதல் 150 ரூபாய் வரை உயர்த்தப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில், மதுரையிலிருந்து முக்கியமான நகரங்களான அருப்புக்கோட்டை,தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற நகரங்களுக்கு செல்லும் பிரதான தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மதுரை எலியார்பத்தி சுங்கச்சாவடியில், கட்டண உயர்வு அமலுக்கு வரவிருந்த நிலையில் ,சாலைகள் சரியின்மை,கழிவறைகள், குடிநீர் வசதிகள் போன்றவை எலியார்பத்தி சுங்கசாவடியில் இருந்து தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இல்லாததால், பழைய நிர்ணய கட்டணமே அமலுக்கு வருவதாக தேசிய நெடுஞ்சாலை துறை அமைச்சகம் சார்பில் பழைய நிர்ணய கட்டணமே எலியார்பத்தி சுங்கச்சாவடியில் வாகன ஓட்டிகளிடம் வசூல் செய்யலாம் என்று அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

தமிழ்நாட்டில் 24 சுங்கச் சாவடிகள் சுங்க சாவடி கட்டணம் உயரவுள்ள நிலையில்,இதே போன்று நாங்குநேரி சுங்கச்சாவடியில் கட்டண உயர்வு அமலுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News