மனைவியை நேசிக்கிறவங்க குக்கர் வேணாம்னு சொல்லமாட்டாங்க.. மதுரையில் நூதன பிரசாரம்
மனைவியை நேசிக்கிறவங்க குக்கரை வேண்டாம்ன்னு சொல்ல மாட்டாங்க.. என்ற வாசகத்துடன் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம வேட்பாளர் குக்கருக்கு வாக்குக்கேட்டு ஒட்டியுள்ள போஸ்டர்கள் அனைவகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது:
தமிழகத்தில் வருகிற பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில், கடந்த ஜனவரி 28 ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதற்காக, தமிழகத்தில் உள்ள பிரதான கட்சிகள் அதன் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்தநிலையில், மதுரை மாநகராட்சியின் மாமன்ற பதவிக்காக 61வது வார்டின் வேட்பாளராக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் குக்கர் சின்னத்தில் போட்டியிட உள்ள பெண் வேட்பாளர் பாத்திமா பீவி வாக்காளர்களை கவருவதற்காக, மனைவியை ரொம்ப நேசிக்கிறவங்க குக்கரை வேண்டாம்ன்னு சொல்ல மாட்டாங்க..,குக்கருக்கு ஓட்டு போடுங்க... என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளை வார்டு முழுவதும் ஒட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபடத் தொடங்கியுள்ளார்.