தமிழக அரசைக் கண்டித்து நீதிக்கட்சி இயக்கத்தினர் மதுரையில் ஆர்ப்பாட்டம்

Justice Party activists protest in Madurai to condemn the Tamil Nadu government;

Update: 2024-07-04 09:38 GMT

மதுரையில் நீதிக்கட்சி இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரையில் தமிழக அரசை கண்டித்து நீதிக் கட்சி இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்த 67 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை கண்டித்து தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். கண்டன அறிக்கைகளும் வெளியிடப்பட்டது.

இந்நிலையில்  தமிழகத்தில் அரசு மதுபான கடைகளை மூட வலியுறுத்தி, மதுரையில் அனைத்து மக்கள் நீதிக் கட்சியினர் மாவட்டத் தலைவர் எ. சுரேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மாநில நிர்வாகி செல்வம், கட்சியின் நிறுவனத் தலைவர் யோசன், ஆர்ப்பாட்டத்தை  துவங்கி வைத்து, சிறப்புரை ஆற்றினார் . பாஜக மாவட்ட நிர்வாகி மகா. சுசீந்திரன், தென்னிந்திய பார்வர்ட் பிளாக் நிர்வாகி திருமாறன்ஜி, அனைத்து மக்கள் நீதிக் கட்சி நிர்வாகிகள் வேலுச்சாமி, பூமி ராஜன், கதிரவன், தமிழ் சூரியன், பொன் சுப்பையா, அழகர்சாமி, சங்கர பாண்டி, முகமது தாரீப், மணி, கணேஷ்குமார் உட்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News