மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் தேசிய அளவிலான கருத்தரங்கம்
மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது.
மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் எக்மோ சிகிச்சை தொடர்பான தேசிய அளவிலான மருத்துவர்கள் அடங்கிய கருத்தரங்கம் வேலம்மாள் மருத்துவமனை அரங்கில் நடைபெற்றது.
இதில், வேலம்மாள் கல்வி குழுமத் தலைவர் முத்துராமலிங்கம், நிர்வாக இயக்குநர் கார்த்திக் மற்றும் மதுரை ராஜாஜி மருத்துவமனை டீன் ரத்னவேல் உள்ளிட்ட இந்திய முழுவதும் பல்வேறு பகுதிகளிலிருந்து இதய அறுவை சிகிச்சை மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் பங்கேற்ற மதுரை கல்லூரி டீன் ரத்தினவேல் குறிப்பிடுகையில், இதய நோய் பிரிவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் வேலம்மாள் மருத்துவமனை அதிக அளவில் சிகிச்சை அளித்து சாதனை படைத்துள்ளது. மேலும், புதிய முறை மருத்துவத்திற்கான ஆராய்ச்சி மற்றும் மருத்துவ வசதிகளும் தென்தமிழகத்தில் சிறப்பாக செயல்படுகிறது என்றார்.
தொடர்ந்து, நிகழ்ச்சி முடிவில் வேலம்மாள் மருத்துவமனை இதய அறுவை சிகிச்சை பிரிவு தலைவர் டாக்டர் ராம் பிரசாத் கூறுகையில் ,எக்மோ என்பது இதயமும், நுரையீரலும் செயல் இழந்த பிறகு நார்மல் சிகிச்சை செய்ய முடியாத நிலையில் பயன்படுத்த கூடிய சிகிச்சை முறை தான் எக்மோ தற்போது கொரோனா அதிகரித்த நேரத்தில் இந்த எக்மோ முறை மக்களுக்கு அதிக அளவு தெரியவந்தது.
இந்த எக்மோ சிகிச்சையானது ஒருவர் உயிர் பிழைக்க வாய்ப்புகள் குறைவாக இருக்கும் பட்சத்தில் ,இந்த சிகிச்சை செயல்படுத்தப்படும் என்றார்.