நாகமலை புதுக்கோட்டை நாகேஸ்வரி அம்மன் கும்பாபிஷேகம்

நாகமலை புதுக்கோட்டை நாகேஸ்வரி அம்மன் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Update: 2024-06-12 10:07 GMT

மதுரை அருகே, நாகேஸ்வரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழாவில், அன்னதானம் வழங்கப்பட்டது.

மதுரை நாகமலை புதுக்கோட்டை சின்னக்ககண்ணூ நகர் நாகமலை அடிவாரத்தில், அமைந்து அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ நாகேஸ்வரி அம்மன் புற்று மற்றும் மஹா கணபதி , கருப்பண சாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.

அப்பகுதியில் இருக்கும் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக இக்கோவில் விளங்குகிறது. விசேஷ தினங்களில் இக்கோவில் பக்தர் கூட்டம் அலைமோதும். இக்கோவிலிலில் புனரமைப்பு பணிகள் செய்யப்பட்டு, கும்பாபிஷேக விழா சிறப்பாக நடத்தப்பட்டது.  சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. 

இதில், ஊர் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இதில், அதனைத் தொடர்ந்து மாபெரும் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, திருப்பணிக் குழு, சிறப்பாக செய்து இருந்தனர். முன்னதாக கோயில் முன்பாக யாக பூஜைகள் நடைபெற்றது.

Similar News