மதுரை அருகே முத்துமாரியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

கோவில் பங்குனி உற்சவ பெருவிழா கடந்த 28ஆம் தேதி காப்புக்கட்டுடன் துவங்கி நடைபெற்று வருகிறது.;

Update: 2023-04-06 13:30 GMT

பெருங்குடி அருகே இந்திரா நகர் பர்மா காலனியில் முத்துமாரியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

மதுரை மாவட்டம், பெருங்குடி அருகே இந்திரா நகர் பர்மா காலணியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் பங்குனி உற்சவ பெருவிழா கடந்த 28ஆம் தேதி காப்புக்கட்டுடன் துவங்கி நடைபெற்று வருகிறது.

பங்குனி உற்சவ திருவிழாவில், ஊர் பொதுமக்கள் பொங்கல் வைத்தும்,பால்குடம் எடுக்கும் அக்னி சட்டி எடுத்தும் மாவிளக்கு பூஜை செய்து தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தினர்.விழாவின் முக்கிய நிகழ்வான,மாபெரும் அன்னதானம் 5000 பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.தொடர்ந்து, முளைப்பாரி ஊர்வலத்துடன் முளைப்பாரியை கரைத்து நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை, முத்துமாரியம்மன் திருக்கோவில் வழிபாட்டு சபை தலைவர் பிரதீப் ராஜா, துணைத் தலைவர் ரமேஷ், செயற்குழு உறுப்பினர் மருதுபாண்டியன், செயலாளர் சிவராஜன் பொருளாளர் பிரகாஷ், பூசாரிகள் ரவிச்சந்திரன், கோவிந்தராஜ் தலைமையில் விழா கமிட்டி னர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்..

Tags:    

Similar News