ஆந்திரா மாநில தொழிலாளியிடம் பணம் திருட்டு: போலீஸார் விசாரணை

மதுரை பசுமலையில் ஆந்திரா மாநில தொழிலாளர்கள் தங்கும் கூடாரத்தில் வைத்திருந்த ரூ 2 லட்சம் 80 ஆயிரம் திருட்டு;

Update: 2021-12-10 04:00 GMT

பைல் படம்

மதுரை பசுமலையில் ஆந்திர மாநில தொழிலாளர்களின் கூடாரத்தில் வைத்திருந்த ரூ 2 லட்சத்து 80 ஆயிரத்தை திருடி அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

அந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேஷ் வயது (36) இவர் பசுமலை பகுதியில் சாலையோரத்தில் கூடாரம் அமைத்து மரம் மற்றும் பிளாஸ்டிக் சேர்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.இந்நிலையில் இவர் கூடாரத்தில் வைத்திருந்த ரூ 2 லட்சத்து 80 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர்.இச்சம்பவம் குறித்து வெங்கடேசன் திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில்  அளித்த புகாரின் அடிப்படையில், திருப்பரங்குன்றம் போலீசார் தனிப்படை அமைத்து திருடிய மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News