காணமல் போன குழந்தைகள் எட்டு ஆண்டுகளுக்கு பிறகு மதுரையில் மீட்பு
ஜோசிய தொழிலில் ஈடுபட்டுவந்த நிலையில் கடந்த 2013ஆம் ஆண்டு தொழில் நிமித்தமாக மதுரைக்கு வந்தபோது குழந்தையை தவற விட்டனர்;
மதுரையில் 8 ஆண்டுகளாக தேடிவந்த சிறுவனை கண்டுபிடித்து சகோதரர்களிடம் குழந்தைகள் நல குழுவினர் ஒப்படைத்தனர்.
ஜோசிய தொழிலில் ஈடுபட்டுவந்த நிலையில் கடந்த 2013ஆம் ஆண்டு தொழில் தொடர்பாக மதுரைக்கு, வந்து சாலையோரங்களில் தங்கியிருந்துள்ளனர். அப்போது, மதுரை ரயில் நிலையம் அருகே சண்முகம் - பார்வதி தம்பதியினரின் கடைசி இரு குழந்தைகளான 7வயது நிரம்பிய பெண் குழந்தையும், இரண்டு வயது ஆண் குழந்தையையும் தவற விட்டனர். இந்நிலையில் உரிய தகவல் இல்லாத நிலையில் குழந்தைகள் இருவரையும் மீட்டு குழந்தைகள் நலக்குழுவிடம் ஆஜர்படுத்தி காப்பகத்தில் தங்க வைத்தனர். அந்த 2 குழந்தையின் மூத்த அண்ணனான குமார் என்பவர் தன்னுடன் பிறந்தவர்கள் நலக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது குறித்து, குழந்தைகள் நல அலுவலர் சண்முகத்திடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து, குழந்தைகள் நல குழுவினர் மதுரை மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் தேடி அதற்கான ஆதாரங்களை கண்டுபிடித்து சிறுவனை மீட்டனர். தற்போது, மதுரை கடச்சனேந்தல் பகுதியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் மூலமாக பள்ளியில் 5ம் வகுப்பு படித்துவருவதும் தெரிய வந்தது. இதையடுத்து, குமார் மூலம் சிறுவன் அடையாளம் காணப்பட்டு சகோதரர்களிடம் குழந்தைகள் நல அலுவலர்கள் பாண்டிராஜ் சண்முகம் ஆகியோர் ஒப்படைத்தனர்.