விபத்தில் காயமடைந்த விளையாட்டு வீரருக்கு அமைச்சர் நிதியுதவி
விபத்தில் பாதிக்கப்பட்ட மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஜூடோ விளையாட்டு வீரர் ஆர். பரிதி விக்னேஸ்வரனுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிதியுதவி வழங்கினார்.;
விபத்தில் பாதிக்கப்பட்ட மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஜூடோ விளையாட்டு வீரர் ஆர். பரிதி விக்னேஸ்வரனுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிதியுதவி வழங்கினார்.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஜூடோ விளையாட்டு வீரர் ஆர். பரிதி விக்னேஸ்வரன், நேரில் சந்தித்து, தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில் ரூ.2 இலட்சம் நிதியுதவியினை வழங்கினார்.
மதுரை மாவட்டம், கோச்சடை பகுதியைச் சேர்ந்த ஜூடோ விளையாட்டு வீரர் ஆர். பரிதி விக்னேஸ்வரன் கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீஈஸ்வர் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் ஜூடோ விளையாட்டில் தேசிய அளவில் கடந்த 2023-ஜூலை மாதம் கர்நாடக மாநிலம், பெல்லாரியில் நடைபெற்ற தேசிய கேடட் ஜூடோ போட்டியில் கலந்து கொண்டு, ஐந்தாம் இடம் பெற்றுள்ளார். மேலும், மாநில அளவிலான போட்டிகள் மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு தங்கப்பதக்கங்கள் மற்றும் பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார்.
இவர் கடந்த 26.07.2023 அன்று மதுரையில் ஜூடோ பயிற்சிக்காக செல்லும் போது ஏற்பட்ட விபத்தில் பாதிக்கப்பட்டதில் இடது காலில் ஒரு பகுதியை இழந்துள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் , பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மதுரைக்கு சென்றார். பாதிக்கப்பட்ட விளையாட்டு வீரரை அமைச்சர் , நேரில் சந்தித்து , தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில் ரூ.2 இலட்சத்திற்கான நிதியுதவியினை வழங்கினார்.
இந்நிகழ்வின்போது, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர்ஜெ. மேகநாதரெட்டி, உடனிருந்தார்.