மதுரை மாநகராட்சிப்பள்ளியில் காலை உணவு திட்டத்தை தொடக்கி வைத்த அமைச்சர்
இந்த காலை உணவுத் திட்டத்தின் கீழ் மொத்தம் 7191 மாணவ, மாணவியர்கள் பயன் அடைகின்றனர்;
மதுரை மாநகராட்சி முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் விரிவுபடுத்தப்பட்ட திட்டத்தினை , தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்.
மதுரை மாநகராட்சி, முத்துப்பட்டி அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளியில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்ட திட்டத்தினை , மேயர் இந்திராணி பொன்வசந்த் , முன்னிலையில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் இன்று (25.08.2023) தொடங்கி வைத்தார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 15.09.2022 அன்று முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் மதுரை மாநகராட்சி ஆதிமூலம் தொடக்கப்பள்ளியில் இத்திட்டத்தை , தொடங்கி வைத்தார்கள். மதுரை மாநகராட்சி பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு 5 ஆம் வகுப்பு பயிலும் 26 தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறு.
இதில், திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை உப்புமா வகைகள், கிச்சடி வகைகள், பொங்கல் வகைகள், காய்கறி கிச்சடி, சாம்பார் உள்ளிட்ட பல்வேறு வகையான காலை உணவுகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக 2686 மாணவ, மாணவியர்கள் பயன் பெற்று வருகின்றார்கள். மேலும், 01.03.2023 முதல் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் அனைத்து பள்ளிகளிலும் விரிவாக்கம் செய்வதற்கு ,தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டு இருந்தார்கள்.
அதன்படி, மதுரை மாநகராட்சி 14 நடுநிலைப் பள்ளிகள், மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் உள்ள 20 ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளிகள் மற்றும் 13 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள் என மொத்தம் 73 பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வரை பயிலும் சுமார் 4450 மாணவ, மாணவிகள் தினந்தோறும் பயன்பெற்று வருகிறார்கள். தற்போது,
73 மாநகராட்சி பள்ளிகளுடன் முத்துப்பட்டி அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளி ஈர்த்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டு, அப்பள்ளியில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் 61 மாணவ, மாணவிகள் பயனடைய உள்ளார்கள். இந்த காலை உணவுத் திட்டத்தின் கீழ் மொத்தம் 7191 மாணவ, மாணவியர்கள் பயன் அடைகின்றனர்.
மதுரை மாநகராட்சியில், காலை உணவுத் திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு உணவு பரிமாறும் வகையில் 126 தன்னார்வல பணியாளர்கள் மதிப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சர், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற பகுதிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்துவதற்கு உத்தரவிட்டுள்ளார்கள். அதன்படி , மதுரை மாநகராட்சி மண்டலம் 5 வார்டு எண்.93 முத்துப்பட்டி அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்ட திட்டத்தினை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர், தொடங்கி வைத்து குழந்தைகளுடன் சேர்ந்து உணவு அருந்தினார்கள்.
இந்நிகழ்வில், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், துணை மேயர் தி.நாகராஜன், மண்டலத் தலைவர்கள் சுவிதா, பாண்டிச்செல்வி, கல்விக்குழுத் தலைவர் ரவிச் சந்திரன், கல்வி அலுவலர் நாகேந்திரன், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாநகராட்சி அலுவலர்கள்,உட்பட பலர் கலந்து கொண்டனர்.