விளையாட்டுப் போட்டியில் சாதனை படைத்த மாணவிகள்: அமைச்சர் உதயநிதி பாராட்டு
சிங்கப்பூர், மற்றும் டெல்லியில் சர்வ தேச சாதனை படைத்த மேலூர் பள்ளி மாணவ,மாணவியரை மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் உதயநிதி பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்
சிவகங்கை இராமநாதபுரம் மாவட்ட நிகழ்வில் பங்கு பெற சென்னையிலிருந்து விமானம் மூலம் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மதுரை விமான நிலைம் வந்தடைந்தார்.
மதுரை விமான நிலையத்தில், உயர் கல்வித் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் தளபதி எம்.எல்.ஏ., தமிழரசி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம், தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர்.
அப்போது, சிங்கப்பூரில் நடைபெற்ற சர்வதேச ஒற்றை சிலம்பம் மற்றும் இரட்டை சிலம்பம் போட்டிகளில் உலக சாதனை படைத்து தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்ற மதுரை, மேலூர் மௌன்ட் லிட்ரா ஜீ சீனியர் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வரும் மாணவி நித்திகா (வயது 10) மற்றும் கிக் பாக் லிங் பயின்று டெல்லியில் நடைபெற்ற சர்வதேச சிக் பாக்ஸிங் போட்டியில் பங்கு பெற்று வெள்ளிப்பதக்கம் வென்ர இதே பள்ளியை சேர்ந்த 5-ம் வகுப்பு பயிலும் மாணவர் இன்பென்ட் ஆல்வின் சுதன் (வயது 10) ஆகிய இரண்டு மாணவர்களையும் ,மதுரை விமான நிலையத்தில் சந்தித்த தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இருவரையும் பாராட்டி மென்மேலும் சாதனை படைக்க வாழ்துக்களை தெரிவித்தார். மேலும், அவர்களுக்கு தேவையான அரசின் உதவிகளை உதவிட உறுதியளித்தார்.