மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
மதுரை மீனாட்சி அம்மனுக்கும் சுந்தரேஸ்வரருக்கும் நாளை ஞாயிறு அன்று திருக்கல்யாண வைபவம் நடக்கவுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நாளை நடக்கிறது.
மதுரை:
மதுரை புகழ்மிக்க மீனாட்சி திருக்கல்யாணம் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெறுகிறது. மதுரை திருவிழா என்பது உலகப் புகழ்பெற்றது. அவ்வாறு புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. நாளை, ஞாயிற்றுக்கிழமை காலை மீனாட்சிக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
மதுரை மாவட்டத்தில், உள்ள மீனாட்சி சுந்தர திருக்கோயில், நாளை திருக்கல்யாணம் வழக்கமாக நடைபெறும். மதுரை தாசில்தார் நகர், சித்தி விநாயகர் கோவில் தெரு வில் உள்ள சித்தி விநாயகர் ஆலயம், வரசித்தி விநாயகர் ஆலயம், ஜூப்ளி டவுன் ஞான சித்தி விநாயகர் ஆலயம் ,மதுரை மேலமடை தாசில்தார் நகர் சௌபாக்கிய விநாயகர் ஆலயத்தில், நாளை காலை 11 மணியளவில் மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதை ஒட்டி, இக்கோயில் அமைந்துள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரனுக்கு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, காலை 11 மணி முதல் 12 மணி வரை மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெறும்.
இதை அடுத்து பக்தர்களுக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் அன்னதானங்கள் வழங்கப்படும். இதே போல, சோழவந்தான் அருகே தென்கரை மூலநாதர் சுவாமி ஆலயத்தில், நாளை காலை மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர். மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை முன்னிட்டு, மதுரை மாநகர ஆணையர் லோகநாதன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.