மதுரையில் மெக்கானிக் வெட்டி கொலை: சிறார்கள் 6 பேர் கைது
மதுரையில் மெக்கானிக் வெட்டிக் கொலை செய்ததாக சிறார்கள் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.;
மதுரை ஆகஸ்ட் 29 எல்லிஸ் நகரில் வீட்டு வாசலில் செல்போன் பேசிக்கொண்டிருந்த மெக்கானிக்கை கொலை செய்த சிறுவர்கள் ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.
எல்லீஸ் நகர் பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் வீரையா மகன் பிரகாஷ் 21. இவர் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார் .மூன்று தினங்களுக்கு முன்பு நண்பர்களுடன் மது அருந்துவதில் வாய் தகராறு ஏற்பட்டது. இதனால் முன்விரோதத்தில் இருந்து வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை வீட்டு வாசலில் செல்போன் பேசிக் கொண்டிருந்த மெக்கானிக் பிரகாஷை ஆறு பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி சாய்த்து விட்டு அங்கிருந்து ஓடி விட்டனர்.
இந்த தகவல் அறிந்த எஸ்.எஸ்.காலனி போலீசார் கொலை செய்யப்பட்ட பிரகாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் .இந்த கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி நடத்தி குற்றவாளிகளை அடையாளம் கண்டனர். இந்த கொலை தொடர்பாக 17 வயது 16 வயது கொண்ட ஆறு சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.