மதுரையில் கருணாநிதி நூற்றாண்டு விழா பூங்காவை திறந்த மேயர் இந்திராணி
மதுரையில் கருணாநிதி நூற்றாண்டு விழா பூங்காவை மேயர் இந்திராணி பொன்வசந்த் திறந்து வைத்தார்.;
மதுரை மாநகராட்சி பழங்காநத்தம் பகுதியில் ,புதிதாக அமைக்கப்பட்டுள்ள டாக்டர் கலைஞர் நூற்றாண்டு பூங்காவினை, மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் ச.தினேஷ் குமார் , வடக்கு சட்டமன்ற உறுப்பினர்கோ.தளபதி ஆகியோர் பயன்பாட்டிற்கு இன்று (29.02.2024) திறந்து வைத்தார்கள்.
மதுரை மாநகராட்சி மண்டலம் 5 வார்டு எண்.74 பழங்காநத்தம் பகுதியில் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் ரூ.74 லட்சம் மதிப்பீட்டில் பூங்காவில் சுற்றுச்சுவர், பேவர் பிளாக், நடைபாதைகள், அமரும் இருக்கைகள், ஒளிரும் விளக்குகள், ஆழ்துளை கிணறு, புல்தரைகள், விளையாட்டு உபகரணங்கள், பூச்செடிகள், யோகா மையம், கழிப்பறைகள்உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் பூங்கா அமைக்கப் பட்டுள்ளது.
புதிதாக அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவினை, மேயர் , ஆணையாளர், சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள். புதிய பூங்கா அமைக்கப் பட்டதன் மூலம் வார்டு எண்.71, 72 மற்றும் 74 ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்கள் குழந்தைகள் அனைவருக்கும் பொழுதுபோக்கு தலமாக உள்ளது.
மதுரை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 64 மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் 19151 மாணவ, மாணவிகளுக்கு திருச்சி லயன் டேட்ஸ் நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியின் கீழ் ஊட்டச்சத்துள்ள லயன் டேட்ஸ் சிரப்புகள் வழங்கப்படுகிறது. இன்று வெள்ளி வீதியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 1299 மாணவிகளுக்கு, திருச்சி லைன் டேட்ஸ் நிறுவனம் சார்பில் ஊட்டசத்துள்ள டேட்ஸ் சிரப்புக்களை , மேயர், ஆணையாளர் ஆகியோர் வழங்கினார்கள்.
தொடர்ந்து, மதுரை மாநகராட்சி மண்டலம் 4 வார்டு எண்.44 பாலரெங்கா புரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் “உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின்” கீழ் பொதுப்பணித்துறை சார்பில் ரூ.3.59 கோடி மதிப்பீட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல், கழிப்பறைகள், குடிநீர், வர்ணம் பூசுதல், நோயாளிகள் காத்திருப்போர் அறைகள், நோயாளிகள் வசதிக்காக கூடுதல் 35 படுக்கை வசதிகள், சுற்றுச்சுவர் உள்ளிட்ட பல்வேறு புனரமைப்பு பணிகள் புற்றுநோய் மற்றும் அரசு பொதுமருத்துமனை கட்டிடத்தில் மேற்கொள்ளப்பட உள்ளது. புதுப்பிக்கப்பட உள்ள புற்றுநோய் கட்டிடம் மற்றும் அரசு பொது மருத்துவமனை கூடுதல் கட்டிடத்திற்கான பூமி பூஜை, மேயர், ஆணையாளர், சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், துணை மேயர் தி.நாகராஜன், மண்டலத் தலைவர்கள் சுவிதா, முகேஷ் சர்மா, பாண்டிச்செல்வி, உதவி ஆணையாளர்கள் சுரேஷ்குமார், ரெங்கராஜன் , மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், அரசு இராசாசி மருத்துவமனை முதல்வர் மரு.ரத்தினவேல், உதவி செயற்பொறியாளர் மயிலேறிநாதன், உதவி செயற்பொறியாளர் (பொதுப்பணித்துறை) சண்முகம், சுகாதார அலுவலர் வீரன், சுகாதார ஆய்வாளர் கவிதா, மாமன்ற உறுப்பினர்கள் சுதன், ஜெயராம்,மூவேந்திரன் , காவேரி, அமுதா, ஜென்னியம்மாள், தமிழ்ச் செல்வி திருச்சி லையன் டேட்ஸ் நிறுவன மேலாளர்கள் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.