மதுரை மாநகராட்சியில் பொங்கல் விழா :மேயர் ,ஆணையாளர் பங்கேற்பு

மதுரை மாநகராட்சியில் பொங்கல் விழாவில் மேயர் , ஆணையாளர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Update: 2024-01-13 10:42 GMT

மதுரை மாநகராட்சியில் பொங்கல் விழா:

மதுரை:

மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில், பொங்கல் திருவிழா ௨௦௨௪ மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் கொண்டாடப்பட்டது.

மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில், பொங்கல் திருவிழா மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் லி.மதுபாலன் ஆகியோர் தலைமையில் மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மற்றும் அலுவலர்கள் அனைவரும் கலந்து கொண்டு பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது.

தமிழர்களின் பாரம்பரிய திருவிழாவான பொங்கல் திருவிழா அனைத்து கிராமங்கள், நகரங்கள், விவசாயிகள், வீடுகள், பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், அரசுத்துறைகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணியாற்றும் பணியாளர்கள், அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் நடைபெற்ற பொங்கல் திருவிழாவில், பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்ட கயிறு இழுக்கும் போட்டி, உறியடி போட்டி, மியூசிக்கில் கார்டு, பலூன் உடைத்தல், பேட்பால் ரவுண்டு உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் மிகச்சிறப்பாக நடைபெற்றது. விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

மேலும், கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை, மேயர், ஆணையாளர் ஆகியோர் வழங்கினார்கள். இவ்விழாவில் ,கலந்து கொண்ட அனைவரும் தமிழரின் பாரம்பரிய வேட்டி, சட்டைகள் அணிந்து பொங்கல் வைத்து கொண்டாடினார்கள்.

இந்நிகழ்வில், மண்டலத் தலைவர்கள் சரவணபுவனேஸ்வரி, பாண்டிச் செல்வி, முகேஷ்சர்மா, கல்விக் குழுமத் தலைவர் ரவிச்சந்திரன், துணை ஆணையாளர் சரவணன், கண்காணிப்பு பொறியாளர் அரசு, நகர்நல அலுவலர் மரு.வினோத்குமார், செயற்பொறியாளர் (திட்டம்) மாலதி, கல்வி அலுவலர் மாரிமுத்து, மாமன்ற செயலாளர் சுரேஷ்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி நகர்நல அலுவலர் மரு.பூபதி, உதவி செயற் பொறியாளர்கள்,

உதவி பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், பணியாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள், மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News