மதுரையில் கெத்து காட்டிய ஒபிஎஸ் அணியினர்: எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அதிர்ச்சி
மதுரையில் கெத்து காட்டிய ஒபிஎஸ் அணியினரால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.;
ஒற்றை தலைமை பிரச்சனையால் ஓபிஎஸ் இபிஎஸ் அணி இரண்டாக பிரிந்தது. இதில் இபிஎஸ் அணி தமிழக முழுவதும் தங்களது ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர்கள் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்களை மாவட்ட செயலாளராகவும் மாநில பொறுப்புகளையும் வழங்கி வருகின்றனர். மேலும் ஓபிஎஸ் ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கி வருகின்றனர்.
இதே போல ஓபிஎஸ் அணியினர் தங்களது தரப்பு ஆதரவாளர்களை கட்சியின் நிர்வாகிகளாகவும் மாவட்டச் செயலாளராக நியமனம் செய்து இபிஎஸ் ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கி வருகின்றனர்.
இதை மதுரை மாவட்ட மாநகர செயலாளர் நியமிக்கப்பட்ட கோபாலகிருஷ்ணன் இன்று கட்சி தொண்டர்கள் ஐந்தாயிரம் பேர் படைசூல மதுரை மாவட்ட நீதிமன்றம் கேகே நகர் சாலையில் உள்ள ஜெயலலிதா ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட பின் ஜெயலலிதா எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிக்க வருகை தந்த கோபாலகிருஷ்ணன் தொண்டர்கள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடியது எடப்பாடி பழனிச்சாமி தரப்பு ஆதரவாளர்களை அதிர்ச்சியில் உள்ளாக்கி உள்ளது.