மதுரையில் நடந்த ரயில் விபத்து: தலைமை பாதுகாப்பு ஆணையர் விசாரணை
தெற்கு வட்ட ரயில்வே பாதுகாப்பு ஆணையர் டி.எம்.சௌத்ரி முன்பாக விசாரணை நடைபெற்றது;
மதுரை ரயில் பெட்டி தீ விபத்து குறித்து இன்று தெற்கு வட்ட ரயில்வே பாதுகாப்பு ஆணையர் தலைமையில் இன்று விசாரணை - சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் தகவல் அளிக்கலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மதுரை ரயில் நிலையம் அருகே யார்டு பகுதியில் நேற்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலாப் பயணிகள் ரயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டதில் 9 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களது உடல்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் விபத்து தொடர்பாக 2 ஆவது நாளாக தடயவியல் நிபுணர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து ரயில்வே பராமரிப்பு பணி பொறியாளர்கள் சோதனை செய்தனர்.இந்த நிலையில், விபத்து தொடர்பாக இன்று தெற்கு வட்ட ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி இன்று சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.
முன்னதாக, மதுரை ரயில் பெட்டி தீ விபத்தில் ஏற்பட்ட பொழுது ரயிலில் இருந்து குதித்து தப்பி சென்ற 5 பயணிகளை ரயில்வே பாதுகாப்பு படையினரை மீட்டுவந்த நிலையில் தப்பியோடிய 3 பேர் மட்டும் தற்போது மதுரை ரயில்வே மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டு தெற்கு வட்ட ரயில்வே பாதுகாப்பு ஆணையர் டி.எம்.சௌத்ரி முன்பாக விசாரணை நடைபெற்றது.
அதற்காக, மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் இன்று தீ விபத்து சம்பவம் தொடர்பாக விசாரணையை நடைபெற்றது.இந்த விசாரணையின் போது, தீ்விபத்து சம்பவம் மற்றும் அதனுடன் தொடர்புடைய விவரங்கள், ஆவணங்களை வழங்க விரும்பும் பொதுமக்களும் இந்த விசாரணையின்போது தகவல் அளிக்கலாம்.
மதுரை தீ விபத்து ஏற்பட்ட ரயிலில் இருந்து கட்டு கட்டாக எரிந்த நிலையில் ருபாய்கள் மீட்புமதுரை ரயில் நிலையம் அருகே நேற்று தீ விபத்து ஏற்பட்ட ரயில் பெட்டியில் இரண்டாவது நாளாக தடயவியல் நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டு வரும் பொழுது, ரயில் பெட்டிக்குள் இருந்து எரிந்த நிலையில் சில கட்டுகள் ரூபாய் நோட்டுகள் எடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, பயணிகள் வழி செலவுக்காக சுற்றுலா ஏஜெண்ட்கள் வைத்திருக்கலாம் கூறப்படு கிறது. மேலும், சுமார் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மதிப்பிலான 500 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் எடுக்கப்பட்டது. மேலும், எரிந்த நிலையில் உள்ள பணத்தை தடயவியல் நிபுணர்கள் மீட்டுள்ளனர்.