மதுரை திருப்பரங்குன்றம் திருமணவிழாவில் டிரம்ஸ் வாசித்து அசத்திய மணமகன்

மதுரை திருப்பரங்குன்றம் திருமணவிழாவில் டிரம்ஸ் வாசித்து அசத்திய மணமகனால் மண்டபமே களை கட்டியது.

Update: 2024-06-13 10:35 GMT

திருமண விழாவில் மண மாலையுடன் டிரம்ஸ் வாசித்த மணமகன்.

மதுரை திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற  திருமண நிகழ்ச்சியில் டிரம்ஸ் வாசிப்பில் இறங்கினார் மணமகன் - மணமகனின் டிரம்ஸ் வாசிப்பில் மணப்பெண் மயங்கினார்.

மதுரை கிரைம் பிராஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் குமார். இவருக்கும் மதுரையைச் சேர்ந்த யுவராணி என்ற பெண்ணுக்கும் பெரியவர்களால் நிச்சயம் செய்யப்பட்டு, திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிலையில், திருமணம் முடிக்கப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் கலை நிகழ்ச்சிகளுடன் திருமண வீட்டார் விருந்து ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த நிலையில், திருப்பரங்குன்றம் கோவிலில் திருமணம் முடித்த கையோடு மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்த கலை நிகழ்ச்சியில், பேண்ட் வாத்தியம் வாசிக்கப்பட்டது. அப்போது, திடீரென களத்தில் இறங்கிய மணமகன் மகேஷ் குமார் ட்ரம்ஸ் வாசிப்பில் ஈடுபட்டார். *"_விஸ்வநாதன் வேலை வேண்டும்., விஸ்வநாதன் வேலை வேண்டும்_"* என்ற பாடலுக்கு தனக்கே உரிய பாணியில் டிரம்ஸ் வாசித்தார்.

*_"ரோஜா.... ரோஜா...."_* என்ற பாடலுக்கும் டிரம்ஸ் வாசித்தார். மணமகன் டிரம்ஸ் வாசித்த வாசிப்பில் மயங்கிய மணமகள் யுவராணி மணமகனையே வியந்து பார்த்தது அங்கிருந்தவர்களிடையே நெகழ்ச்சியை ஏற்படுத்தியது. திருமணம் முடிந்த கையோடு மணமகன் டிரம்ஸ் வாசிப்பில் ஈடுபட்ட சம்பவம் திருமணவீட்டார் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News