மதுரை- கருணாநிதி பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
திருப்பரங்குன்றத்தில் கருணாநிதி பிறந்த நாள் விழா.;
மு.கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி, மதுரை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மாவட்ட துணை அமைப்பாளர் விமல் ஏற்பாட்டின் பேரில் ஏழை எளிய ஆதரவற்றவர்களுக்கு அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்றது .
திருப்பரங்குன்றம் கோயில் சன்னதி வாசல் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் , சமூக இடைவெளியுடன் அனைவரும் முகக் கவசம் அணிந்து ஏழை எளிய மற்றும் முதியவர்கள் , ஆதரவற்றவர்களுக்கு காலை உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வழங்கினர். இந் நிகழ்ச்சிக்கு , வடக்கு பகுதி திமுக கழகச் செயலாளர் கிருஷ்ண பாண்டியன் தலைமை வகித்தார்.வட்டச் செயலாளர் ஆறுமுகம் உட்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.