கோயில்களை திறக்கக் கோரி திருப்பரங்குன்றத்தில் ஆர்ப்பாட்டம்
விதிமுறைகளுக்கு உட்பட்டு டாஸ்மாக் கடைகளை தமிழக அரசு திறந்தது போல், சமூக இடைவெளியுடன் கூடிய விதிமுறைகளுடன் கோயில்களை திறக்கக் கோரி ஆர்ப்பாட்டம்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில், திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் முன்பாக அகில பாரத இந்து சேனா சார்பில் இந்து கோயில்களை திறக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விதிமுறைகளுக்கு உட்பட்டு டாஸ்மாக் கடைகளை தமிழக அரசு திறந்தது போல், சமூக இடைவெளியுடன் கூடிய விதிமுறைகளுடன் கோயில்களை திறக்கக் கோரி, ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் , மதுரை மாவட்ட தலைவர் நாராயணன் மண்டலத் தலைவர் வேலாயுதம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.