மதுரை நகரில் சாலையில் தேங்கும் மழைநீருடன் கழிவு நீரால் மக்கள் அவதி

ஆறு போல் ஓடும் கழிவுநீரால் நோய் தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளதாக மாநகராட்சி மீது பொதுமக்கள் புகார்;

Update: 2023-10-01 10:30 GMT

திருவள்ளுவர் நகர் மெயின் ரோடு பகுதியில், அமைந்துள்ள தனியார் பள்ளி, கோவில் மற்றும் குடியிருப்பு அதிகம் உள்ள பகுதியில் கழிவுநீர் குளம் போல தேங்கியு உள்ளது.

சாலைகளில் மழைநீருடன் கழிவு நீரும் கலந்து குளம் போல் தேங்கி நிற்பதால்  டெங்கு, வைரஸ் காய்ச்சல்  போன்ற  நோய்களால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், மாநகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை எனவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். 

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 70 வது வார்டு நேரு நகர் திருவள்ளுவர் நகர் மெயின் ரோடு பகுதியில், அமைந்துள்ள தனியார் பள்ளி, கோவில் மற்றும் குடியிருப்பு அதிகம் உள்ள பகுதியில் கழிவுநீர் குளம் போல தேங்கியு உள்ளது.

இதனை சரி செய்ய மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுவதுடன் அப்பகுதியில் குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதாகவும், மேலும், அப்பகுதி மக்களுக்கு காய்ச்சல் மற்றும் வாந்தி பேதி உள்ளிட்ட நோய் தொற்று நோய்கள் பாதிக்கும் சூழ்நிலை  ஏற்படுவதாகும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இது குறித்து, மாநகராட்சி அதிகாரிகளிடம்கேட்டதற்கு, மோட்டார் பழுதாகி உள்ளது எனவும், இதை சரி செய்வதற்கான நடவடிக்கை எடுப்பதாக ஒரு வாரத்துக்கு முன்பதாகவே நம்மிடம் தகவல் தெரிவித்தனர். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நோய் தொற்று ஏற்பட்டு உயிர் இழப்பு ஏற்படும் முன்  மாநகராட்சி நிர்வாகம் விழிப்புடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர். 

இதேபோல, மதுரை அண்ணாநகர், தாசில்தார் நகர், கோமதிபுரம் பகுதியில் உள்ள வீரவாஞ்சி தெரு, காதர்மொய்தீன் தெரு, அன்பு மலர் தெரு, மருதுபாண்டியர், சௌபாக்ய கோயில் தெருவில், சாலையிலே கழிவு நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.காதர் மொய்தீன் தெருவில் பல மாதங்களாக சாக்கடை நீர் மூடி வழியாக பீறிட்டு வெளியேறுகிறதாம். இது குறித்து, மதுரை மாநகராட்சி உதவி ஆணையாளர் துரித நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.

Tags:    

Similar News