சிறு, குறு தொழில்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை: அமைச்சர்

கொரோனா காலக்கட்டத்தில், சிறு, குறு தொழில்களை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

Update: 2021-07-23 07:52 GMT

மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி அளித்தார்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த தமிழக தொழில் துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்

கொரோனோவால் முடங்கி இருக்கும் சிறு குறு தொழில்கள் முன்னேற்றம் குறித்தக்கு கேள்விக்கு அவர் அளித்த பதில்

கொரோனா கால கட்டத்தில் பொதுமக்கள் சிரமப்படக் கூடாது என்பதற்காக, தமிழக முதல்வர் தொழிற்சாலை இயங்குவதற்காக நடவடிக்கை எடுத்துள்ளார்.

பலதொழில் நிறுவனங்களுக்கு அவர்கள் செலுத்தக்கூடிய தவணைகளை மாற்றிக் கொடுத்துள்ளார்கள். அந்த நிறுவனங்களுக்கான புதிய கடன் விதிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா காலத்தில் சிறு குறு தொழில் நிறுவனங்கள் காப்பாற்றுவதற்கு அனைத்து முயற்சிகளையும் தமிழக முதல்வர் ஒரு தொகுப்பாக செய்துள்ளார் என்றார்.

Tags:    

Similar News