மதுரை அருகே கூடல் நகர் ரயில் நிலையத்தில் எம்.பி. ஆய்வு

கூடல்நகர் ரயில் நிலையத்தை இரண்டாவது முனையமாக மாற்றுவதற்கான ஆலோசனையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்;

Update: 2023-02-25 11:15 GMT

மதுரை கூடல் நகர் ரயில் நிலையத்தில் அதிகாரிகளுடன் ஆய்வு செய்த  மதுரை எம்.பி. வெங்கடேசன்

கூடல்நகர் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் குறித்து மதுரை எம்.பி சு.வெங்கடேசன் ஆய்வு:

மதுரை கூடல் நகர் ரயில் நிலையத்தை  இரண்டாவது ரயில் நிலையம் மாற்றுவது மற்றும் தற்போது பயணிகள் வசதிக்கு அடிப்படை வசதிகள் மேம்படுத்துவது குறித்து மதுரை ரயில்வே முதன்மை கோட்ட பொறியாளர் வில்லியம்ஸ் ஜாய், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜித் சிங் ஆகியோருடன், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் நேற்று ஆய்வு மேற்கொண்டர்.

ஆய்வுக்கு பின்னர் கூடல் நகர் ரயில் நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுரை கூடல்நகர் ரயில் நிலையத்தை இரண்டாவது ரயில் முனையமாக  மாற்றுவதற்கான சில ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

தற்போது பாண்டியன் மற்றும் வைகை விரைவு ரயில்கள் கூடல்நகரில் இருந்து இயக்கப்படுகிறது. அதன் காரணமாக பொது மக்களுக்கு அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதுசம்பந்தமாக கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மதுரை கோட்ட ரயில்வே அதிகாரி ஆனந்த பத்மாநபனிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது.  அதனை தொடர்ந்து, ரயில்வே கோட்ட பொறியாளர், மாநகராட்சி ஆணையாளர் ஆகியோருடன் இணைந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் பாதி நிலம் ரயில்வே நிலையத்துக்கு சொந்தமாகவும் இன்னொரு பாதி மாநகராட்சிக்கு சொந்தமாகவும் இருக்கிறது. எல்லாவற்றையும் சரி செய்வதற்கான ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

அதில், சில வேலைகள் முடிந்துள்ளது.இன்னும் சில வேலைகள் முடிக்கப்படமல் உள்ளது. குறிப்பாக சனிக்கிழமை முடித்து விடுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதில், கூடுதலாக மின் விளக்குகள் அமைக்கப்பட வேண்டும் தற்காலிக சாலைகள் அமைத்து, அதை கூடுதலாக சரிப்படுத்த வேண்டும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளோம்.

அநேகமாக சனிக்கிழமைக்குள்(இன்று) அந்த வேலைகள் எல்லாம் ரயில்வே நிர்வாகத்தின் தரப்பில் வந்து முடிப்பது குறித்து உறுதிப்படுத்தபட்டுள்ளது. அதேபோல, மாநகராட்சி தரப்பில் இரண்டு பக்கமும் கூடுதலாக சில மின் விளக்குகள் வசதி செய்ய வேண்டி இருக்கிறது அதையும் சனிக்கிழமைக்குள்  செய்து கொடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையரும்  ரயில்வே துறை சார்ந்த பணிகளை ரயில் மதுரை கோட்ட தலைமை பொறியாளரும் உறுதி  அளித்திருக்கிறார்கள். நிரந்தரமாக கூடல்நகர் நிறுத்தத்தை இரண்டாவது ரயில்வே நிலையமாக மாற்றுவதற்கு இப்பொழுது ஒரு முன்மொழிவு என்பதற்கு யோசிக்கப்படுகிறது.

அதில் , ஒரு இணைப்பு சாலை மற்றும் ஒரு சுரங்கப்பாதை ஒன்றும் அமைக்கப்பட வேண்டும் இது இண்டும் அமைக்கிற பொழுது நிச்சயம் வந்து கூடல் நகர் ரயில் நிலையத்தின் அபிவிருத்திக்கும் மக்கள் வந்து செல்வதற்குமான முழு வசதியும் கிடைக்கும். இந்த முழுமையான ஒரு திட்டத்தை வருகிற 10-ஆம் தேதி தென்னக ரயில்வேயினுடைய பொது மேலாளர்  தலைமையில் மதுரை கோட்டத்திற்கான நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் மதுரையில் நடக்க இருக்கிறது அதில், தென் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்கவுள்ளார்கள்.

அந்த கூட்டத்தில், இந்த  தீர்மானம்  முக்கியமாக வைக்கப்படும். ஏற்கெனவே, எழுத்துப்பூர்வமாக கூடல்நகர் ரயில் நிலையம் இரண்டாவது முனைமாக மாற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாங்கள் மனு கொடுத்திருக்கிறோம். தொடர்ச்சியாக, கூடல்நகர் ரயில்வே நிலையத்தை இரண்டாவது முனையமாக மாற்றுவதற்கான ஆலோசனையையும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

இந்த ஆலோசனைக்கூட்டத்தை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளது  என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கு மாநில அரசும் சில வேலைகள் வந்து செய்ய வேண்டியுள்ளது. அதனை மாநில அரசினுடைய கவனத்திற்கு நாம் கொண்டு செல்வோம். மேலும் கூடல் நகர் ரயில் நிலையத்திற்கு செல்ல மெயின் ரோட்டிலிருந்து  இணைப்பு சாலைகள் அமைத்தால்  வடபகுதி மக்கள் முழுமையை இதன் மூலம் பயன்பெற முடியும்.

அடுத்த 10 ஆண்டுகளில் மிகப்பெரும் நெருக்கடியை மதுரை மத்திய ரயில் நிலையம் சந்திக்க கூடும் எனவே, தற்பொழுதே  கூடல்நகர் ரயில் நிலையம் இரண்டாவது முனையமாக மாற்றப்பட்டால், மிகப்பெரும் கூட்ட நெருக்கடியை தவிர்க்க முடியும்.  அதற்கான பணிகளை இப்போதே நாம் செய்து முடிக்க வேண்டும் என்றார் எம்பி வெங்கடேசன்.  ஆய்விபோது, மாநகராட்சி துணை மேயர் டி. நாகராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர் மாவட்டச் செயலாளர் மா. கணேசன், செயற்குழு உறுப்பினர் ஜா. நரசிம்மன், மேற்கு ஒன்றிய செயலாளர் பி. ஜீவா, வடக்கு ஒன்றிய செயலாளர் கோட்டைச்சாமி மற்றும் பலர் உடனிருந்தனர்.

தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கூடல்நகர் ரயில் நிலையத்தில் வைகை, பாண்டியன் விரைவு ரயில்கள் நின்று செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன்  கோரிக்கை வைத்தனர்..

Tags:    

Similar News