அஸ்ஸாமில் பணிச்சரிவில் இறந்த ராணுவ வீரரின் உடல், மதுரைக்கு கொண்டு வரப்பட்டது

அஸ்ஸாமில் இறந்த ராணுவ வீரரின் உடல், மதுரைக்கு கொண்டு வரப்பட்டது;

Update: 2021-07-24 16:04 GMT

அசாமில் பணிச் சரிவில் மதுரையை சேர்ந்த இறந்த ராணுவ வீரர் உடல், மதுரைக்கு கொண்டுவரப்பட்டது.

 மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா ,வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் துரைப்பாண்டி இவரது மகன் கதிர்வேல் ( 36). இவருக்கு திருமணமாகி, சண்முகப்பிரியா( 25) என்ற மனைவியும், ஹனிஸ்க் ( 7).மற்றும் பார்த்திவ் ( 3) .ஆகிய 2 மகன்கள் உள்ளனர் . கதிர்வேல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அசாமில்,  வெள்ள மீட்பு  பணியில்ஈடுபட்டிருந்தபோது, ஏற்பட்ட நிலச்சரிவில் கதிர்வேல் மரணமடைந்தார்.

இதுகுறித்து, தகவலறிந்து வந்த ராணுவ அதிகாரிகள் அவரது உடலை மீட்டு அசாம், தலைமையகத்துக் கொண்டு சென்று  அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் இன்று இண்டிகோ விமானம் மூலம், இரவு எட்டு முப்பது மணி அளவில் மதுரை வந்தடைந்து வீட்டுக்கு கொண்டுசெல்லப்பட்டது .

Tags:    

Similar News