மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தேரோட்டம்: அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தேரோட்டம் அலைமோதிய பக்தர்கள் கூட்டத்திற்கு இடையே சிறப்பாக நடைபெற்றது.;
மதுரை மீனாட்சி- சுந்தரேஸ்வரர் ஆலய தேரோட்டம் நடைபெற்றது.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில், சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடள் தொடங்கிய சித்திதை திருவிழாவின் எட்டாவது நாள் மீனாட்சிக்கு பட்டாபிசேஷகம் நடைபெற்றது. மறு நாள் மீனாட்சி திக்விஜயம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து உலக புகழ் பெற்ற மீனாட்சி- சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவின் இன்னொ முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேஸ்வரர் தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள், மீனாட்சியம்மன் தேராட்டத்தை கண்டு தரிசித்தனர். விழாவையொட்டி, பக்தர்களுக்கு நீர் மோர், பானகம் வழங்கப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
சோழவந்தான் அருகே, தென்கரை அகிலாண்டேஸ்வரி அம்மன் சமேத மூலநாத சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் நிகழ்ச்சியை தொடர்ந்து இன்று தேரோட்ட திருவிழா நடந்தது. விழாவை முன்னிட்டு, அகிலாண்டேஸ்வரி அம்மன் சமேத மூல நாத சுவாமி தேரில் வலம் வந்தனர். சுவாமியையும், அம்பாளையும் வரவேற்று அர்ச்சனை பூஜைகள் செய்தனர். பக்தர்களுக்கு நீர் மோர் அன்னதானம் வழங்கினர்.
வழி நெடுக வாழைப்பழம் மற்றும் மாம்பழம் சூறையிட்டனர். விழா ஏற்பாடுகளை, கிராம பொதுமக்கள் செய்து இருந்தனர்.
கோவில் அர்ச்சகர் செந்தில் குமரேசன் தீபாராதனை மற்றும் மகா தீபாரதனை காட்டி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார்.
செயல் அலுவலர் கார்த்திகை செல்வி, கோவில் பணியாளர்கள் மணி, நித்தியா, ஜனார்த்தனன் உள்பட கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். முத்து தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.