மதுரை காமராஜர் பல்கலைக்கழக விடுதி மாடியில் இருந்து கீழே விழுந்த மாணவி சாவு
உடலின் அருகே செல்போன் இருந்ததால் செல்போன் பேசிக்கொண்டே சென்றபோது தவறி விழுந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.;
மதுரை காமராஜர் பல்கலைக்கழக விடுதி மாடியில் இருந்து கீழே விழுந்து மாணவி உயிரிழப்பு ; போலீசார் விசாரணை..*
தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மகேஸ்வரி. இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் (M.Ed) இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலையில் பல்கலைக்கழகத்தில் உள்ள பெண்கள் விடுதி மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.
இதனைக் கண்ட நண்பர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகமலை புதுக்கோட்டை போலீசார் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து மாடியிலிருந்து மாணவி மகேஸ்வரி தவறி விழுந்தாரா..? அல்லது தற்கொலை முயற்சி செய்து கொண்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மாணவி உடலின் அருகே செல்போன் இருந்ததால் செல்போன் பேசிக்கொண்டே சென்றபோது தவறி விழுந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.