பெட்ரோல், டீசல் விலை உயர்வு: ஐஎன்டியூசி ஆர்ப்பாட்டம்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஐஎன்டியூசி ஊழியர்கள் போராட்டம்:;
பெட்ரோல்,டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஐஎன்டியூசி அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு கண்டித்து, மதுரையில் ஐ.என்.டி.யூ.சி, காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், மதுரை பைபாஸ் அரசு போக்குவரத்துக் கழக தலைமையகம் முன்பு நடைபெற்றது.நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு மத்தியஅரசு உயர்ந்து கொண்டே போகிறது இந்தியா முழுதும் பல்வேறு கட்சியினர் பல்வேறு அமைப்பினர் மற்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதையடுத்து ஐஎன்டியூசி, காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்தது.அதன்படி., மதுரை பைபாஸ் சாலையில் உள்ள தலைமை போக்குவரத்துக்கழக முன்பு, மதுரை மண்டல ஐஎப்எஸ்சி காங்கிரஸ் கட்சி சார்பில், அதன் மாநில பொதுச் செயலாளர் ஜீவன் மூர்த்தி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக நாங்குநேரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ரூபி மனோகரன் கலந்துகொண்டு, மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், ஐஎம்டிபி அனைத்து நிர்வாகிகள் மகளிர் மற்றும் பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.