மதுரையில் குடும்ப தகராறில் மனைவிக்கு கத்தி குத்து: கணவர் கைது
மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் குடும்பத்தகராறில் மனைவியை கத்தியால் குத்திய கணவரை போலீசார் கைது செய்தனர்.;
பைல் படம்.
மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் குடும்பத்தகராறில் மனைவியை கத்தியால் குத்திய கணவரை போலீசார் கைது செய்தனர்.
சோலை அழகுபுரம் நான்காவது தெருவை சேர்ந்தவர் ராஜாமனைவி பாண்டிச்செல்வி 25. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். கணவன் மனைவிக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். கணவர் ராஜா ஜெய்ஹிந்த்புரம் வ உ சி தெருவில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று மனைவி வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது கணவர் ராஜா மனைவியை சந்திக்க வந்தார் .அப்பொழுது அவர்களுக்குள் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கணவர் ராஜா மனைவி பாண்டி செல்வியை ஆபாசமாக பேசி கத்தியால் குத்தினார். இந்த சம்பவம் குறித்து பாண்டிச்செல்வி ஜெய்ஹிந்த்புரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கத்தியால் குத்திய கணவர் ராஜாவை கைது செய்தனர்.
தடுப்பு சுவரில் மோதி மொபட்டில் சென்றவர் உயிரிழப்பு
அருப்புக்கோட்டை ரிங் ரோட்டில் சாலை தடுப்புச் சுவரில் மோதி மொபட்டில் சென்றவர் பலியானார்.
வண்டியூர் மீனாட்சிபுரம் பி கே எம் நகரை சேர்ந்தவர் வேலுச்சாமி 45. இவர் சம்பவத்தன்று அருப்புக்கோட்டை ரிங் ரோட்டில் மொபட் ஓட்டிச் சென்று கொண்டிருந்தார் .அப்போது மொபட் கட்டுப்பாட்டை இழந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த தடுப்புச்சுவரில் மோதியது. இந்த சம்பவத்தில் பலமாக அடிபட்டு அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த விபத்து குறித்து அவருடைய மகன் ஹரிஷ் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து வேலுச்சாமியின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையில் நான்கு பேர் உயிரிழப்பு
மதுரையில் நான்கு பேர் வெவ்வேறு சம்பவங்களில் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கே புதூர் கனகவேல் தெருவை சேர்ந்தவர் முதியவர் நாகேந்திரன் 65. இவர் ஆட்டோ ஒட்டி வந்தார். குடிப்பழக்கமும் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் கால் தவறி கீழே விழுந்தார். இதில் இடுப்பு முடிவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் .இது குறித்து மனைவி ஜெயலட்சுமி தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஆட்டோ டிரைவர் நாகேந்திரன் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் .
பொன் மேனியில் வழுக்கி விழுந்தவர் உயிரிழப்பு
பொன்மேனி காந்திஜி தெருவை சேர்ந்தவர் பொன்ராஜ் 52. இவர் வீட்டில் நடந்து சென்ற போது வழுக்கி விழுந்தார்.இதில் அவருக்கு பலமாக அடிபட்டது. அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிர் இழந்தார். இது குறித்து மனைவி பஞ்சவர்ணம் எஸ் எஸ் காலனி போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து இவரது சாவு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெற்கு வாசல் கிருதமா நதியில் மயங்கி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு
தெற்கு வாசல் காஜா தெருவை சேர்ந்தவர் மூதாட்டி பாக்கியலட்சுமி70. இவர் அந்த பகுதியில் முனீஸ்வரர் கோவில் பின்புறம் சென்ற போது திடீரென்று மயங்கி அருகில் கிருதுமால் நதியில் விழுந்தார். இதில் அங்கிருந்த தண்ணீரில் மூழ்கி பலியானார்.இதுகுறித்து மகன் தர்மராஜ் தெற்கு வாசல் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து மூதாட்டி பாக்யலெட்சுமியின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீழவெளி வீதியில் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை
கீழவெளி வீதியை சேர்ந்தவர் பிரதீப்குமார் 43. இவர் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனியாக வசித்து வந்தார். இதனால் மன அழுத்தத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம்குறித்து மனைவி ரூபினி விளக்குத்தூண் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.