தருமபுர ஆதீன மடம் தொடர்பாக மதுரை ஐகோர்ட்டு கிளை பரபரப்பு தீர்ப்பு
தருமபுர ஆதீன மடம் தொடர்பாக மதுரை ஐகோர்ட்டு கிளை பரபரப்பு தீர்ப்பு அளித்து உள்ளது.
தருமபுரம் சண்முக தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரியார் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், பழமையான ஆதீன மடங்களில் ஒன்றாக எங்கள் மடம் உள்ளது. சைவ சித்தாந்த மரபை சார்ந்துள்ளோம் அரசிடமிருந்து எந்தவித உதவியோ, நிதியோ பெறுவது இல்லை மடத்தின் சொந்த நிதியை மட்டும் கொண்டு ஆதீன மடம் மற்றும் குறித்த விபரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டு சிலர் தொந்தரவு செய்கின்றனர்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பொது நிறுவனங்கள் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள்தான் வரும். ஆதீனம் மடங்கள் பொது நிறுவனங்கள் அல்ல என்பதால் ஆதீனங்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வராது என உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆதீனம் மடங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வராது என கூறி உத்தரவிட்டார்.