மதுரை அருகே திருநகரில் மத்திய அரசைக் கண்டித்து இடதுசாரி கட்சிகள் சாலை மறியல்

தமிழக விவசாய அணி செயலாளர் லாசர் மற்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்;

Update: 2021-09-27 12:08 GMT

மதுரை திருநகரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இடதுசாரி கட்சியினர்

மத்திய அரசுக்கு எதிராக மதுரை அருகே திருநகரில் இடதுசாரி கட்சிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலுகா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மற்றும் அகில இந்திய விவசாய சங்கம் அகில இந்திய மகளிர் கூட்டமைப்பு போன்றவற்றின் சார்பாக, மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி   மதுரை அருகே திருநகரில்  சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இதில், தமிழக விவசாய அணி செயலாளர் லாசர் மற்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அரை மணி நேரம் நடைபெற்ற போராட்டத்தில் 60 பெண்கள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  இதனால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News