மணல் கடத்தல் லாரி பறிமுதல் உள்ளிட்ட மதுரை மாவட்ட கிரைம் செய்திகள்

மணல் கடத்தல் லாரி பறிமுதல் உள்ளிட்ட மதுரை மாவட்ட கிரைம் செய்திகள் இங்கே பதிவிடப்பட்டுள்ளது.;

Update: 2023-01-01 09:58 GMT

மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை அண்ணா பல்கலைக்கழகம் அருகே கீழகுயில் குடி கிராம நிர்வாக அதிகாரி வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது ஒரு  டிப்பர் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார் .அதில் இரண்டு லோடு கிராவல் மண். இருந்தது. அது சட்ட விரோதமாக கடத்தப்பட்டது என்று தெரியவந்தது. இதை தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டம் பிள்ளையார் நத்தம் நிலக்கோட்டையைச் சேர்ந்த பிச்சை குமார் மகன் சஞ்சய் கிருஷ்ணா( 22 )என்பவர் மீது நாகமலை புதுக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அவருடன்சென்ற திண்டுக்கல் மாவட்டம் அணைப்பட்டி சுரேஷ் கண்ணன் ,தனக்கன்குளம் வயக்காட்டு சாமி ஆகிய இருவரும் தப்பி ஓடிவிட்டனர் .இது தொடர்பாக நாகமலை புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து சஞ்சய்கிருஷ்ணாவை கைது செய்தனர்.மணலுடன் டிப்பர்லாரி,செல்போன் ஒன்றையும் பறிமுதல் செய்தனர்.

லாட்டரி சீட்டு விற்ற முதியவர் கைது

மதுரை ஒத்தக்கடைபோலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் .இவர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தா.ர் அவர் ஒத்தக்கடை மெயின் ரோட்டில் டீக்கடை ஒன்றின்அருகே சென்றபோது அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த முதியவர் ஒருவரை பிடித்தார். அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் மேலூர் மெயின் ரோடு உத்தங்குடியைச் சேர்ந்த ஜெயராமன்(வயது 69 )என்று தெரிய வந்தது. அவரிடம் இருந்து 10 லாட்டரி சீட்டுகளையும் விற்பனை செய்த பணம் ரூ 2ஆயிரத்தையும், செல்போன் இரண்டையும் பறிமுதல் செய்து அவரை கைது செய்தார்.

மயங்கி விழுந்தவர் சாவு

தூத்துக்குடி கொல்லன் கிணறு கிழக்கு தெருவை சேர்ந்தவர் கதிர்வேல் மகன் (சரவணன் 39 )இவர் கடந்த ஐந்து வருடங்களாக வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அதற்கான சிகிச்சையும் பெற்று வந்தார் .இந்த நிலையில் மதுரை மத்திய சிறை அருகே அவர் சென்றபோது வலிப்பு நோய் வந்து மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமா உயிரிழந்தார் .இந்த சம்பவம் குறித்து அவருடைய தம்பி முருகேசன் கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சரவணனின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இளைஞர் மர்ம சாவு

மதுரை கோரிப்பாளையம் கான்சாபுரத்தை சேர்ந்தவர் மணி மகன் ரமேஷ் குமார் ( 36. ).இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இந்த நிலையில் வீட்டில் தூங்கச் சென்றவர் தூங்கிய நிலையிலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அவருடைய அம்மா இந்திராணி தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவுசெய்து ரமேஷ் குமார் எப்படி இறந்தார் ,தற்கொலை செய்து கொண்டாரா ,அல்லது வேறு காரணம் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

2 பெண்கள் கைது

மதுரை திடீர் நகரை சேர்ந்தவர் பாண்டியம்மாள் (வயது 36.) இவர் பெரியார் பேருந்து நிலையம் நான்காம் பிளாட்பாரத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அவருடைய மணி பர்சை இரண்டு பெண்கள் அவரது கவனத்தை திசை திருப்பி திருட முயற்சித்தனர். அப்போது பாண்டியம்மாள் கூச்சல் போடவே மற்ற பயணிகள் அவர்கள் இருவரையும் சுற்றிவளைத்து பிடித்தனர். அவர்களை திடீர் நகர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.போலீசார் அந்த பெண்களிடம் விசாரித்தபோது ஒத்தக்கடை பாரதிநகரை சேர்ந்த ஈஸ்வரி (வயது 50 ), அதே பகுதியைச் சேர்ந்த முத்து லட்சுமி( 45 ) என்று தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.பெண்பயணி பாண்டியம்மாளிடம் பர்ஸில் ரூ 500 வைத்திருந்தார.அந்த பணத்தை திருட முயன்றபோதுதான் அவர்கள் இருவரும் கையும் களவுமாக பிடிபட்டனர்.

Tags:    

Similar News