திரையரங்க கேண்டீனில் மோசடி செய்த 2 ஊழியர்கள் கைது

மதுரையில் நடைபெற்ற பல்வேறு குற்ற சம்பவங்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்;

Update: 2023-12-02 01:00 GMT

மாட்டுத்தாவணி பூமார்கெட் அருகே பைக் ஓட்டிச்சென்றவர் தலைசுற்றி கீழே விழுந்து உயிரிழப்பு

மதுரை அருகே கடச்சனேந்தல் காதக்கிணறு வாட்டர் டேங்க்மூன்றாவது தெருவைச்சேர்ந்தவர் மலைச்சாமி (66).இவர் ,மாட்டுத்தாவனி பூமார்க்கெட் அருகே பைக்ஓட்டிச்சென்றார்.அப்போது, திடீரென்று அவருக்கு தலை சுற்றல் ஏற்பட்டது. இதனால், பைக்கிலிருந்து தவறி கீழே விழுந்தார்.இதில், அவருக்கு தலையில் பலமாக அடிபட்டது.அவரை, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சைபலனின்றி மலைச்சாமி உயிரிழந்தார்.இந்த விபத்து குறித்து, அவர் மகன் பழனிக்குமார் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து,  விசாரணை நடத்தி வருகின்றனர்.

 சினிமா தியேட்டரில் கேண்டீனில் ரூ 3 லட்சம்  மோசடி செய்த ஊழியர்கள் 2பேர் கைது:

வில்லாபுரத்தில், சினிமா தியேட்டரில் கேண்டீனில் பில் இல்லாமல் தின்பண்டங்கள் விற்று மோசடி செய்த இரண்டு ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.வில்லாபுரம் மெயின் ரோட்டில் பிரபல சினிமாதியேட்டர் உள்ளது.இதன் கேண்டீனில், அவனியாபுரம் எஸ்.கே.ஆர்.நகரைச்சேர்ந்தவர் சரவணகுமார் (22).மீனாட்சி நகர், நல்லதம்பிதெருவைச் சேர்ந்த மாரிமுத்து மகன் மெய்யப்பன்( 22).

இவர்கள் அந்த தியேட்டரில் கேண்டீனில் விற்பணையாளராக வேலை பார்த்து வந்தனர்.அவர்கள் பாப்கான்,பெப்சி,டீ,காபி உட்பட தின்பண்டங்களை பில்போடாமல் விற்பணை செய்து வந்துள்ளனர்.இது தியேட்டர் நிர்வாகத்திற்கு தெரிய வந்தது. இதையடத்த அவர்கள் இருவரையுல்  ரகசியமாக அவர்களை கண்காணித்து கையும் களவுமாக பிடித்தனர்.இது குறித்து, தியேட்டர் மேலாளர் முனியராஜா அவனியாபுரம் போலீசில் புகார்செய்தார்.போலீசார் வழக்குப்பதிவுசெய்து ,கேண்டீன் ஊழியர்கள் சரவணகுமார்,மெய்யப்பன் இருவரையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News