பள்ளிச்சிறுவர்களுக்கு போதைமாத்திரை விற்பனை:2 வாலிபர்கள் கைது

மதுரையில் நடந்த பல்வேறு குற்ற சம்பவங்கல் தொடர்பாக 5 பேரை போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர்;

Update: 2023-11-30 09:30 GMT

பைல் படம்

 பள்ளிச்சிறுவர்களுக்கு போதை மாத்திரை விற்பனைசெய்த இரண்டு வாலிபர்கள்  கைது 

செல்லூர் விஸ்வநாதபுரத்தில் பள்ளிஒன்றின் அருகே சிறுவர்களுக்கு போதைமாத்திரை விற்பணைசெய்வதாக போலீசுக்கு ரகசியதகவல் கிடைத்தது.இதைத்தொடர்ந்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மகேந்திரன் போலீசாருடன் சென்று பள்ளிஅருகே ரகசியமாக கண்காணித்தார்.இவர் அங்கு போதைமாத்திரை விற்பணைசெய்த இரண்டுவாலிபர்களை பிடித்தார்.அவர்களை சோதனை செய்தபோது அவரகளிடம் 20 போதைமாத்திரைகள் இருந்தன.அவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.பின்னர் பிடிபட்டவாலிபர்களிடம் விசாரணை நடத்தினர்.விசாரணையில் அவர்கள் கிருஷ்ணாபுரம்காலனி மூன்றாவதுதெரு ஜெயபாலன்மகன் நவீன்குமார் 21,கீரைத்துரை விலக்கு சூசையப்பாபுரம் சிந்தாமணி ரோட்டைச்சேர்ந்த பொன்ராஜ் மகன் அரவிந்த் 20என்று தெரிந்தது.அவர்களை போலீசார் கைதுசெய்தனர்.

அரசு டாக்டர் தாயாரிடம் எடட்டரை பவுன் சங்கிலி திருட்டுல் பணிப்பெண் கைது

மதுரையில், அரசுடாக்டர் தாயாரிடம் மருத்துவமனையில் கைவரிசை காட்டாஎட்டரைப்பவுன் தங்கச்சங்கிலி திருடடிய உதவிப் பணிப் பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

அண்ணாநகர் சாந்தி நிகேதன் அப்பார்ட்மெண்டில் வசிப்பவர் கிஷோர்54.இவர் திருச்சி அரசு மருத்துவமனையில் நரம்பியயல் டாக்டராக வேலை பார்த்துவருகிறார்..இவர் தாய் கஸ்தூரி நோய் வாய்ப்பட்டிருந்தார்.அவரை முனிச்சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ,சிகிச்சைக்காக சேர்த்திருந்தார்.

அவருக்கு உதவியாக பணி செய்ய எஸ்.ஆலங்குளம் சாஸ்தாநகர் இரண்டாவது தெருவைச் சேர்ந்த கணேசன் மனைவி அம்முவை சேர்த்திருந்தார். தாய் கஸ்தூரிக்கு சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.அப்போது, பார்த்த போது அவர் அணிந்திருந்த எட்டரை பவுன் தங்கச்சங்கிலி திருடப்பட்டிருந்தது.இது குறித்து, டாக்டடர் கிஷோர் விளக்குத் தூண் போலீசில் புகார் செய்தார்.

அதில், பணிப்பெண் அம்மு மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்திருந்தார்.போலீசார் வழக்குப் பதிவு செய்து ,விசாரணை நடத்தினர்.பின்னர் டாக்டர் தாயிடம் செயின் திருடிய பணிப்பெண் அம்முவை கைதுசெய்தனர்

மாநகராட்சி உதவிகமிஷனர் மகன் எனக்கூறி மாமுல்கேட்டு தாக்கிய வாலிபர் கைது:

கரூர் மாவட்டம், கரையாபட்டி சாலிக்கரைபட்டியைச்சேர்ந்தவர் ராஜா52.இவர் முல்லைப்பெரியாறு குடிநீர்குழாய்பதிக்கும் திட்டப்பணியில் இருந்துவந்தார்.இவர் ஒப்பந்தப்பணியாளர் ஆவார்.இவர்கள் சோலையழகுபுரம் முதல்தெரு திருப்பதிநகர் சந்திப்பில் வேலைசெய்துகொண்டிருந்தனர்.அப்போது அங்கு வந்த டி.வி.எஸ்.நகர் ராஜம் ரோட்டைச்சேர்ந்த அப்துல்லத்தீப்45என்பவர் தான் ஒரு வழக்கறிஞர் என்று கூறியுள்ளார்.அவர் தாயார் மதுரை மாநகராட்சி துணைகமிஷனர் என்றும் இந்தப்பகுதியில் வேலைசெய்தால் ரூபத்தாயிரம் மாமூல்கட்டவேண்டும் கட்டத்தவறினால் ரூ 20ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று மிரட்டியுள்ளார்.இவருக்கு பணம் தர ராஜா மறுத்துள்ளார்.ஆதனால் ஆத்திரமடைந்த அப்துல்லத்தீப் அவரை ஆபாசமாக பேசி தாக்கியுள்ளார்.கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.இந்த சம்பவம்குறித்து ,ராஜா ஜெய்ஹிந்துபுரம் போலீசில் புகார்செய்தார்.போலீசார் வழக்குப்பதிவுசெய்து அப்துல்லத்தீபை கைது செய்தனர்.

சிட்பண்ட் மாடியிலிரருந்து தவறி விழுந்த தொழிலாளி மரணம்

மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவாநகர் முதல்தெருவைச்சேர்ந்அதவர் கண்ணணன் மகன் சரவணக்குஉமார் 39.இவர் கூலிவேலை பார்த்துவந்தார்..டிவி..எஸ்.நகரில் உள்ள சிடட்பண்ட் கட்டிடத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார்.அபபோது மாடியில் இருந்து தவறி கீழே விழுஉந்தார்..இதில் பலமாக அடிபபட்ட நிலையயில்‌அவரை சிகிசச்சசைக்காக மதுரை அரசு மரருத்துவமனையில் சேர்த்தனரர்.அங்கு சிகிச்சை சசலனின்றி சரவணக்குமார் உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவவுசெய்து அவர் சாவுக்கான காரணம்குறித்து விசாரணை நடத்தி வருகினறனர்.

காதலியுடன் தகராறுல்:வடமாநில வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை.

மேற்குவங்க மாநிலம் பஹிம்மெந்திபூரைச் சேர்ந்தவர் சுபல்கோஸ் மகன் ஹிப்சந்திரபோஸ் 19.இவர் டி.ஆர்.ஓ.காலனியில் வீட்டுவசதி வாரியத்தால் கட்டப்பட்டு வரும் பதினான்குமாடி கட்டிடத்தில் வேலை பார்த்து வந்த்தார்.ஈரோட்டை தலைமை இடமாகக் கொண்ட நிறுவனம் இந்தக்கட்டிடத்தை ஒப்பந்த அடிப்படையில் கட்டி வருகின்றனர்.

இந்த கட்டிடத்தின் மாடியில் தங்கி இருந்தபடி ஹிப்சந்திரபோஸ் வேலை பார்த்து வந்தார்.இவர் தினமும் அவர் காதலியுடன் பேசிவந்தார்.சம்பவத்தன்றும் காதலியுடன் பேசிக் கொண்டிருந்தபோது அவர்களுக்குள் வாக்கு  வாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்து வாலிபர் ஹிப்சந்திரபோஸ் அதே மாடியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.இந்த சம்பவம் குறித்து, அவர் வேலை பார்த்த நிறுவனத்தின் நிர்வாகி விருத்தாசலத்தை சேர்ந்த சண்முகம் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவுசெய்து வாலிபர் ஹிப்சந்திரபோஸின் தற்கொலைக்கான காரணம்குறித்து, விசாரணை நடத்திவருகின்றனர்.

Tags:    

Similar News