மதுரை அருகே தொழிலதிபர் வீட்டை உடைத்து நகை திருட்டு
மதுரையில் நடைபெற்ற பல்வேறு குற்ற சம்பவங்களின் தொகுப்பை இங்கே காணலாம்
மதுரை அருகே துவரிமானில்பெயிண்ட் கடை உரிமையாளர் வீட்டை உடைத்து நகை திருட்டு
மதுரை அருகேதுவரிமானில் பெயிண்ட் கடை உரிமையாளர்வீட்டைஉடைத்து 72 பவுன் தங்க நகை,ஒன்றரை கிலோ வெள்ளி நகைகள் கொள்ளையடித்துச்சென்ற கொள்ளையனை போலீசார் தேடிவருகின்றனர்.
மதுரை அருகே துலரிமான் வெங்கடாஜலபதிநகரைச்சேர்ந்தவர் ரமேஷ்கண்ணன்(54.)இவர் ,கே.கே.நகரில் பெயிண்ட்இடை நடத்திவருகிறார்.கடந்த ஆறுமாதமாக கே.கே.நகரில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்துவருகிறார்.இதனால் அவ்வப்போது துவரிமானுக்குசென்று வீட்டைப்பார்த்து வந்தார்.வீட்டை சுத்தம் செய்ய பெண் ஒருவரை வேலைக்குச் சேர்த்திருந்தார். சம்பவத்தன்று துவரிமான் வீட்டை சுத்தம்செய்யச்சென்ற வேலைக்காரப்பெண், வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதாக உரிமையாளர் ரமேஷ்கண்ணாவுக்கு தகவல் சொன்னார்.
இதையடுத்து அங்கு சென்று ரமேஷ்கண்ணா பார்த்தபோது ,வீட்டில் பீரோவில் வைத்திருந்த 72பவுன் தங்க நகைகள் ஒரு கிலோ 560கிராம் வெள்ளி நகைகள் காணாமல் போனது தெரியவந்தது. .இது குறித்து, நாகமலைபுதுக்கோட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவுசெய்து, அவர் வீட்டில் கொள்ளை அடித்துச்சென்ற ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
அவனியாபுரத்தில் பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை.
மதுரை அவனியாபுரம் பாம்பன்நகர் குமரன் நகரைச் சேர்ந்தவர் மணிமுருககண்ணன்(48.)இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது.இவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி குழந்தைகளுடன் பிரிந்து சென்று விட்டார்.இதனால் இவர் அக்கா வீட்டில் சாப்பிட்டுக் கொண்டு அவர் வீட்டருகே வீடுபிடித்து வசித்து வந்தார். அவர் சில நாட்களாக வீட்டிற்கு சாப்பிட வரவில்லை.இதனால் அவரைத் தேடிச்சென்று பார்த்தபோது வீடு உள்புறமாக பூட்டியிருந்தது.உள்ளேயிருந்து துர்நாற்றம் வீசியது.இதைத்தொடர்ந்து கதவை உடைத்து பார்த்தபோது உள்ளே தூங்கில் தொங்கியபடி இற்நது அழுகிய நிலையில் இருந்தார்.இந்த சம்பவம்குறித்து அவர் அக்கா அமுதா அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவுசெய்து மணிமுருககண்ணணின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.
மாடுத்தாவணியில் முன்விரோதத்தில் பார் ஊழியரைத்தாக்கிய ஆறு பேர் கைது
மதுரை .கே.புதூர் டோபிகாலனியைச் சேர்ந்தவர் காசிராஜன் மகன் வசந்தராஜன்( 25.) இவர் கே.கே.நகரில் டாஸ்மார்க் பாரில் வேலை பார்த்து வருகிறார்.இவருக்கும் சிலருக்கும் ஏற்கெனவே முன்விரோதம் இருந்து வந்தது.இந்த நிலையில் மாட்டுத்தாவணி காய்கறிமார்க்கெட் மேற்கு நுழைவுவாயில் அருகே சென்றுகொண்டிருந்த போது எட்டுபேர் கொண்ட கும்பல் வசந்தராஜனை வழிமறித்து ஆபாசமாக திட்டியபடி பாட்டிலாலும் கல்லாலும் தாக்கியுள்ளனர்.
இந்த சம்பவம்குறித்து வசந்தராஜன் மாட்டுத்தாவணி போலீசில் புகார் செய்தார்.போலீசார் எட்டுபேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.பின்னர் அவரைத் தாக்கிய சுயராஜ்யபுரம் ஏந்தாவது தெரு முருகன் மகன் ராஜ்குமார் 25,செல்லூர் சோனையார்கோவில்தெரு முருகன் மகன் விக்னேஷ் 21செல்லூர் சுயராஜ்யபுரம் ஐந்தாவதுதெரு செந்தில்குமார் மகன் கரண் உட்பட ஆறுபேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள இரண்டுபேரை தேடிவருகின்றனர்.
பெரியார் பஸ் நிலையத்தில் சிறுவனா மதுபாட்டிலால் தாக்கிய வாலிபர் கைது.
மதுரை அருகே கள்ளந்திரி தொப்புலாம்பட்டியை சேர்ந்தவர் பாக்கியம் மகன் அபினேஷ்( 17.).இவர், நண்பர்களுடன் விளையாடச்சென்றுவிட்டு தொப்புலாம்பட்டி செல்ல பெரியார் பஸ் நிலையத்தில் காத்திருந்தார்.அப்போது அங்கு நின்ற சிக்கந்தர்சாவடி சங்கீத் நகர் முதல் தெருவைச்சேர்ந்த ஜஸ்டின் மகன் பென்னி(19 )என்பவரும் நின்றார்.அவர் திடீரென்று தன்னை முறைத்துப் பார்ப்பவதாக கூறி அபினேசிடம் தகராறு செய்தார்.பின்னர் அவர் வைத்திருந்த மதுபாட்டிலால் அபினேஷை தாக்கினார். இந்த சம்பவம் குறித்து அபினேஷ் திடீர் நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து தாக்கிய வாலிபரை கைது செய்தனர்.