மதுரை மாவட்ட க்ரைம் செய்திகள்

Crime News Tamil Today -முதியவரிடம் இருந்த பர்ஸை திருடிய மர்ம நபர் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.;

Update: 2022-11-16 01:09 GMT

மதுரை மாவட்டத்தில் நடந்த குற்றச்சம்பவங்களின் தொகுப்பு.

முதியவரிடம் நகை பணம் திருட்டு

Crime News Tamil Today -பேரையூர் டி.கல்லுப்பட்டி தென்றல் நகரை சேர்ந்தவர் போஸ் 64 .இவர், மதுரைக்கு வந்திருந்தார் .பஸ்சுக்காக பெரியார் பஸ் ஸ்டாண்ட் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அவர் நேதாஜி ரோடு அருகே சென்றபோது, அவர் வைத்திருந்த பர்ஸை காணவில்லை. மர்ம நபர் திருடியது தெரிந்து, முதியவர் அதிர்ச்சியடைந்தார். அந்த பர்ஸில் ஒரு பவுன் தங்க டாலர், வங்கி ஏடிஎம் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், பணம் ரூபாய் 1000 ஆகியவை இருந்தன .இந்த திருட்டு குறித்து, போஸ் திடீர்நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.

 பஸ் ஸ்டாண்ட்டில் ஆக்கிரப்பு; 3 பேர் கைது

மதுரை, அண்ணா பஸ் ஸ்டாண்டில் ரோட்டை ஆக்கிரமித்து கடை நடத்திய மூன்று பேரை, போலீசார் கைது செய்தனர். கரும்பாலை, இந்திரா நகர் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் சோமசுந்தர பாண்டியன் 43 .இவர் அண்ணா பஸ் ஸ்டாண்டில் ரோட்டை ஆக்கிரமித்து பூக்கடை நடத்தி வந்தார் .அவரை மதிச்சியம் போலீசார் கைது செய்தனர். கீழ்மதுரை, சின்ன கண்மாய் அசோக் தெருவை சேர்ந்தவர் துறை கடத்திகான் 37. இவர், அண்ணா பஸ்ஸ்டான்டில் பொதுமக்களுக்கு இடையூறாக, ஓட்டல் நடத்தியதால் அவரை போலீசார் கைது செய்தனர். மேலூர், வைத்தியநாதன் தெருவை சேர்ந்தவர் ஆனந்தன் மகன் லிங்கம் 19. இவரும் அண்ணா பஸ் ஸ்டாண்டில் ரோட்டை ஆக்கிரமித்து கடை நடத்தினார். அவரையும் போலீசார் கைது செய்தனர்.

புகையிலை பொருட்கள் விற்ற ஒருவர் கைது

பி.பி.குளம், காமராஜர் முதல் தெருவை சேர்ந்தவர் சித்திக் 52. இவர் ,நேதாஜி மெயின் ரோட்டில் காபி கடை நடத்தி வருகிறார். அந்த கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்து வந்தார் .இந்த தகவல் அறிந்த, தல்லாகுளம் போலீசார் கடைக்கு சென்று சோதனை செய்தனர். கடையில் இருந்த, 28 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். அவற்றை விற்பனை செய்த சித்திக்கை கைது செய்தனர்.

தாக்குதல் நடத்திய ஆட்டோ டிரைவர் கைது

ஜெய்ஹிந்த்புரம், பாரதியார் தெரு, சோலை அழகுபுரத்தைச் சேர்ந்தவர் கண்ணன் 63. ஆட்டோ டிரைவர் .அவர் தமிழ் சங்கம் ரோட்டில் ஆட்டோ ஸ்டாண்டில் நிறுத்தி, ஆட்டோ ஓட்டி வருகிறார். மேல அண்ணா தோப்பு, எஸ்.எம்.எஸ் .காலனி நான்காவது தெருவை சேர்ந்தவர் ரவி 51. இவரும், ஆட்டோ டிரைவராக அதே தமிழ் சங்கம் ரோட்டில் ஆட்டோ நிறுத்தி ஓட்டிவருகிறார். இவர்களுக்குள் முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், நடந்த தகராறில் ஆத்திரமடைந்த ரவி, கண்ணனை கையாலும் இரும்பு நாற்காலியாலும் தாக்கினார். இதுகுறித்து, கண்ணன் திலகர் திடல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, கண்ணனை தாக்கிய ரவியை கைது செய்தனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2 

Tags:    

Similar News