மதுரையில் தேசிய ரியல் எஸ்டேட், டெவலப்பர்ஸ் நலச்சங்க நிர்வாகிகள் கூட்டம்
மதுரையில் தேசிய ரியல் எஸ்டேட், டெவலப்பர்ஸ் நலச்சங்க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
திருப்பரங்குன்றத்தில் இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் டெவலப்பர்ஸ், நிலத் தரகர் நலச்சங்கம் 18-வது ஆண்டு விழாக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மதுரை தெற்கு மாவட்ட சங்க புதிய நிர்வாகிகள் அறிவிப்பு கூட்டமாய் நடந்தது.
கூட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவர் வி.என். கண்ணன், மதுரை தெற்கு மாவட்ட தலைவர் சோனைமுத்து, தலைமை தாங்கினர். மாவட்டச் செயலாளர் பொன்னாங்கன், திருமங்கலம் தொகுதி தலைவர் ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய மாநில தலைவர் வி.என்.கண்ணன், கடந்த ஐந்து ஆண்டுகளில், ரியல் எஸ்டேட் தொழில் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. அதனை மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பத்திரப்பதிவு துறையில் அரசு அறிமுகப்படுத்தியுள்ள 8 %முதல் சதவீதத்திலிருந்து 11% சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனை திரும்பப் பெற்று 5% சதவீதமாக குறைக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.