மதுரையில் கத்தி முனையில் வழிப்பறி செய்த இளைஞர் கைது
மதுரையில் கத்தியைக் காட்டி வழிப்பறி செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.;
மதுரையில் கத்தியைக் காட்டி வழிப்பறி செய்த இளைஞர் கைது
மேல அனுப்பானடியை சேர்ந்தவர் இருளாண்டிசாமி மகன் வெற்றி முருகன்37. இவர், தெற்குவாசல் கிருதுமால்நதிரோட்டில் சென்று கொண்டிருந்தார். அவரை, வாலிபர் ஒருவர் வழிமறித்தார். அவர் கத்தியை காட்டி மிரட்டி, அவரிடம் இருந்து ரூபாய் 450 ஐ வழிப்பறி செய்து விட்டு ஓடிவிட்டார்.இந்த சம்பவம் குறித்து, வெற்றி முருகன் தெற்கு வாசல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட தோப்பூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு முருகன் மகன் சண்முகம் என்ற வேல் என்ற வாலிபரை கைது செய்தனர்.
காதலியுடன் இருந்த படம் வீடியோவை கணவருக்கும் சமூக வலைதளத்திலும் வெளியிட்ட இளைஞருக்கு வலை வீச்சு.
பாண்டிச்சேரியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் மதுரை கூடல்புதூரை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்துள்ளார். திருமண ஆசை காட்டி அவரிடம் பலமுறை அவர் உல்லாசமாக இருந்துள்ளார்.அப்போது காதலிக்கு தெரியாமல் செல்போனில் படமும் வீடியோவும் எடுத்துள்ளார்.இந்த நிலையில் காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்தது.அதன் பின்பும் காதலியை உல்லாசமாக இருக்க அழைத்துள்ளார்.இதற்கு அவர் மறுத்துவிட்டார்.இதனால் காதலியுடன் இருந்த புகைப்படத்தையும் வீடியோவையும் காட்டி அவரை உல்லாசமாக இருக்க அழைத்து மிரட்டியுள்ளார்.இதற்கு அவர் சம்மதிக்கவில்லை. இதனால் அவருடன் இருந்த புகைப்படத்தையும் சமூக வலைதளங்களிலும் , அவருடைய கணவருக்கும் அனுப்பிமிரட்டி வந்துள்ளார்.இந்த சம்பவம் குறித்து அந்தப்பெண் கூடல் புதூர் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை மிரட்டி பாண்டிச்சேரியை சேர்ந்த வாலிபரை தேடி வருகின்றனர்.
கீரைத்துரையில் ஆசிட்குடித்து ஒருவர் தற்கொலை
மதுரை சிந்தாமணி கண்ணன் காலனியை சேர்ந்தவர்சோமஸ் கந்த மூர்த்தி 45. இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. சில நாட்களாக இவர் மன அழுத்தத்தில் இருந்து வந்தார் .இந்த நிலையில் வீட்டில் ஆசிட்டை குடித்து மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து அவர் மகள் ஹம்சவாகினி கீரைத்துரை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிறந்தநாள் பார்ட்டிக்கு தந்தை பணத்த தர மறுத்ததால் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
மதுரை. திருப்பாலை சக்கிமங்கலம் கரந்தமலை நகரை சேர்ந்தவர் மூர்த்தி மகன் அய்யனார் 21. இவருக்கு நிரந்தர வேலை இல்லை.அவருக்கு பிறந்தநாள் வந்தது. இந்த நிலையில் பிறந்தநாள் பார்ட்டி கொண்டாடுவதற்காக தந்தையிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர் பணம் தர மறுத்துவிட்டார். இதனால் மணமுடைந்த வாலிபர் அய்யனார் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து தந்தை மூர்த்தி திருப்பாலை போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபர் அய்யனாரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூடல் புதூரில் பணம் வைத்து சூதாடிய 11 பேர் கைது:ரூ75ஆயிரம் பறிமுதல்.
மதுரை திண்டுக்கல் மெயின் ரோடு விசாலாட்சி மில் அருகே கும்பல் ஒன்று பணம் வைத்து சூதாடுவதாக கூடல்புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. காவல் ஆய்வாளர் தினேஷ் போலீசாருடன் சம்பவ இடத்திற்கு சென்றார் .அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த 11 பேரை பிடித்தார். பிடிப்பட்ட நபர்களிடம் விசாரித்த போது அவர்கள் மேல பொன்னகரம் இரண்டாவது தெரு கோவிந்தசாமி, சுரேஷ் 32, அரசன் 53, சாகுல்ஹமீது 43 மற்றும் லட்சுமணன் உள்பட 11பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து சூதாடிய சீட்டு கட்டுகளையும் பணம் ரூபாய் 75 ஆயிரத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
நகைக் கடைகளில் தொடர்ந்து கைவரிசை காட்டிவந்த 2 பெண்கள் கைது.
மதுரை கீழவெளிவீதி கிருஷ்ணா அவென்யூவை சேர்ந்தவர் செல்வராஜ் 59. இவர் தெற்காவணி மூல வீதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இலரது கடைக்கு சென்ற இரண்டு பெண்கள் கடையில் இருந்த அரைப்பவுன் தோடட்டை நகை வாங்குவது போல் நடித்து திருடி சென்று விட்டனர். இதுகுறித்து செல்வராஜ் விளக்குத்தூண் போலீசில் புகார் செய்தார்.
இந்த சம்பவம் நடந்து சில தினங்களில் காமராஜர் சாலை ரெங்கநாயகி தெருவை சேர்ந்த சிவகுமார் 48 என்பவரின் தெற்கு சித்திரை வீதியில் உள்ள கடைக்கு இரண்டு பெண்கள் சென்றனர். அவர்கள் அந்த கடையில் நகை வாங்குவது போல் நடித்து முக்கால்பவுன் எடையுள்ள தோட்டை திருடிச் சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்தும் கடை உரிமையாளர் சிவக்குமார் விளக்குத்தூண் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கடை உரிமையாளர்களும், போலீசாரும் கடையில் பதிவாகி இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர் .அப்போது இரண்டு சம்பவங்களிலும் ஒரே பெண்கள்தான் திருடியது தெரியவந்தது. அவர்கள் யார் என்று போலீசார் தேடி வந்தனர் .இந்த நிலையில் ஏற்கெனவே திருடி மாட்டிக்கொள்ளாததால்.தங்களை அடையாளம் தெரியவில்லை என அவர்கள் நம்பியுள்ளனர்.இதனால் மீண்டும் கைவரிசையை காட்ட நகைக்கடை பஜாருக்கு சென்றனர்.அப்போது ஏற்கனவே திருடிய நகைக்கடை வழியாக சென்றுள்ளனர். அப்போது கடையின் உரிமையாளர்கள் அவர்களை அடையாளம் கண்டுபிடித்து அவர்களைவிரட்டிப்பிடித்தனர். பின்னர் அவர்களை விளக்கத்தூண் போலீசில் ஒப்படைத்தனர்.போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியபோது ஒத்தக்கடை ஐயப்பன் நகர் நான்காவது தெரு செல்லம் மகள் தரணி 32 ,ஒத்த கடை சக்கரா நகரைச் சேர்ந்த ஜெகதீஷ்குமார் மனைவி சந்தியா 27 என்று தெரிய வந்தது அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.