மதுரை அருகே திருநகரில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை
மதுரையில் நடைபெற்ற பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 6 பேரை போலீஸார் கைது செய்தனர்;
திருநகரில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
மதுரை, திருப்பரங்குன்றம் ஆர்வி பட்டி காளவாசல் ரோட்டைச்சேர்ந்தவய் சேது பாண்டி மகன் முத்துவேல் 38. இவருக்கு திருமணமானது முதல் குழந்தை இல்லை .இதனால் மன அழுத்தத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் ரயில்வே நிலையம் அருகே உள்ள வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இந்த சம்பவம் குறித்து, மனைவி கௌசல்யா திருநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபர் முத்துவேலின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வண்டியூரில் பசுமாடு திருடிய 2 வாலிபர்கள் கைது:வேன் பறிமுதல்.
மதுரை வண்டியூர் பத்தினி அம்மன் கோவில் தெரு அனுமார்பட்டியை சேர்ந்தவர் முருகன் மனைவி ராணி 35. இவர், பசுமாடுகள் வளர்த்து வருகிறார். இவரது ,வீட்டிற்கு அருகில் கட்டி இருந்த இரண்டு மாடுகளையும் காணவில்லை.மர்ம நபர்கள் திருடிவிட்டனர்.இது குறித்து, அவர் அண்ணா நகர் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினர் .விசாரணைக்கு பின் பசுமாடுகளை திருடிய வாடிப்பட்டி தாலுகா தெங்கரை சம்பத் மகன் செல்வம் 23, சோழவந்தான் நாராயணபுரம் ஆறுமுக மகன் விசுவநாத் 28 ஆகிய இருவரையும் கைது செய்தனர் .அவர்கள் திருடுவதற்கு பயன்படுத்திய வேன் ஒன்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கீழ் மதுரை ரயில்வே சந்திப்பு அருகே24 கிலோ கஞ்சா பறிமுதல்:4 வாலிபர்கள் கைது.
மதுரை தெப்பக்குளம் காவல் உதவி ஆய்வாளர் முருகனுக்கு ,கிடைத்த தகவலின் அடிப்படையில் கீழ் மதுரை ரயில்வே நிலைய சந்திப்பில் கஞ்சா விற்பதாக தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, அவர் போலீசாருடன் ரகசியமாக அந்த பகுதியை கண்காணித்தார். அப்போது, அங்கு கஞ்சா விற்பனை செய்வது உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அங்கு விற்பனை செய்த நான்கு வாலிபர்களை சுற்றி வளைத்து பிடித்தார். பிடிபட்ட வாலிபர்களிடம் விசாரித்த போது, திடீர் நகர் அலாவுதீன் தோப்பு சலீம் மகன் சசீர் 23, வாடிப்பட்டி வினோபா நகர் சொக்கலிங்கபுரம் காந்தி மகன் திலீப் குமார் 22, சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வெள்ளாளர் தெரு செல்வம் மகன் குருமூர்த்தி20, உசிலம்பட்டி வடக்கு தெரு நரியம்பட்டி சந்திரன் மகன் சரத்குமார் 22 என்று தெரியவந்தது. அவர்கள் நான்கு பேரையும் கைது செய்து விற்பனைக்காக அவர்கள் வைத்திருந்த 24 கிலோ கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.