மதுரையில், டூ வீலரில் சென்ற பெண்ணின் 15 பவுன் நகை பறிப்பு
மதுரையில் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக 11 பேரை போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர்;
அண்ணா நகரில் மொபட் ஓட்டிச் சென்ற பெண்ணிடம்15 பவுன் தாலி செயின் பறிப்பு
மதுரை, கே.கே. நகர் மானகிரி ஐந்தாவது தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் மனைவி மகாலட்சுமி 37. இவர், இரு சக்கர வாகனம் ஓட்டி சென்று கொண்டிருந்தார். அண்ணா நகர் செல்வ விநாயகர் கோவில் தெருவில் இவர் ,சென்று கொண்டிருந்தபோது, அவரை பின்தொடர்ந்து இரண்டு பைக் ஆசாமிகள் சென்றனர். அவர்கள் மகாலட்சுமி அணிந்திருந்த பனிரெண்டரை பவுன் தாலி செயினையும் ,இரண்டரை பவுனில் மற்றொரு செயினையும் பறித்துச் சென்று விட்டனர்.இந்த சம்பவம் குறித்து, மகாலட்சுமி அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் ,வழக்குப் பதிவு செய்து, அவரிடம் செயின் பறித்த பைக் ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
மதுரையில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை:ஆறு பேர் கைது
மதுரை எஸ் எஸ் காலனி போலீசார் காளவாசல் பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்த சுரேந்திரன் 41 என்பவரை கைது செய்து செய்தனர். அதே பகுதியில் லக்ஷ்மணன் 60 என்பவரிடமிருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து அவரையும் கைது செய்தனர்.
ஜெய்ஹிந்த்புரம் போலீசார் பாரதியார் ரோட்டில் ஜாகிர் உசேன் மகன் அப்துல் கலாம் 21 என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து புகையிலை பாக்கெட் களையும் பறிமுதல் செய்தனர். சுப்பிரமணியபுரம் போலீசார் திருவள்ளுவர் நகரை சேர்ந்த தர்மராஜ் 55 என்பவரை கைது செய்து அவரிடம் இருந்தும் புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.திடீர்நகர் போலீசார் டவுன்ஹால் ரோட்டில் விற்பனை செய்த தலைவிரிச்சான்சந்து கிருஷ்ணமூர்த்தி மகன் கௌதம் 22 என்ற வாலிபரை கைது செய்து அவர் விற்பனை செய்யவைத்திருந்த பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர் .
ஜெய்ஹிந்த்புரம் போலீசார் எம்.கே.புரத்தை சேர்ந்த கணேசன்44என்பவரை கைது செய்து அவர் விற்பனை செய்ய வைத்திருந்த தடை செய்யப்பட்ட புகையிலைப் பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர் .மதுரையில் புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்த மொத்தம் ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுரையில் கஞ்சா ஆயுதங்களுடன் நான்கு பேர் கைது: ஆட்டோ, பைக் பறிமுதல்
மதுரை திருப்பரங்குன்றம் பெரியரத வீதியில் ஆட்டோவில் வைத்து கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவத்திற்கு சென்று கண்காணித்தனர் .அப்போது ஆட்டோவில் வைத்து கஞ்சா விற்பனை செய்த திருநகர் நெல்லையப்பபுரம் மலைச்சாமி மகன் அஜய் 21, தனக்கன்குளம் கார்த்திகா நகர் பாலகிருஷ்ணன் மகன் கண்ணன் 32 ,தனக்கன்குளம் போஸ்ட் ஆபீஸ் தெரு மாரியப்பன் மகன் தீபக் குமார் 29 ஆகியோரை கைது செய்து அவர்கள் ஆட்டோவில் வைத்திருந்த 150 கிராம் கஞ்சாவையும் வாள், கத்தி போன்ற ஆயுதங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கீரைத்துரையில் ஒருவர் கைது
கீரைத்துரை போலீசார் மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் கஞ்சாவ விற்பனை செய்த பெண் உள்பட 3 பேர்மீது வழக்கு பதிவு செய்து ஒருவரை கைது செய்தனர் .அவர்கள் மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருக்கு சிந்தாமணி ராஜம்மான் நகரை சேர்ந்த நல்லுசாமி 46, ரகுராமன் மற்றும் அவருடைய மனைவி பஞ்சு ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். அவரிடம் இருந்து ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவையும் அவர்கள் வைத்திருந்த பைக்கையும் பறிமுதல் செய்து நல்லசாமியை கைது செய்தனர் .ரகுராமனையும் அவர் மனைவி பஞ்சையும் போலீசார் தேடி வருகின்றனர்.